வானியல் வல்லுநர்: 20 Interesting Facts about Astronomers in Tamil
வானியலாளர் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
வானியல் வல்லுநர் அல்லது வானியலாளர் (Astronomer) என்பவர் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு அறிவியலாளர் ஆவார். அவர் விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், நெபுலா, கருந்துளைகள், விண்மீன் பேரடைகள் போன்ற வானியல்சார் பொருட்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பவர். வானியளாலர் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Astronomer in Tamil
வானியல் வல்லுநர் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. “நவீன வானியலின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் கலீலியோ ஆவார்.
2. வானியல் என்பது ஒரு பழங்கால அறிவியல் துறையைச் சேர்ந்தது.
3. வானியல் ஆய்வாளர் ஆவதற்கு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இயற்பியலில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். கணக்கில் வல்லமையாக இருக்க வேண்டியது அவசியம். பிறகு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உதவியாளராக பணிபுரிய வேண்டும்.
4. வானியல் ஆய்வாளர் பொதுவாக பல்கலைக்கழகத்திலோ அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களிலோ பணி புரிவார்கள்.
5. மற்ற துறைகளைப் போல் இந்த துறையில் வல்லமை படைத்த நிபுணர்கள் அதிகம் இல்லை. குறைந்த அளவில் தான் இருக்கின்றனர்.
6. வானியற்பியல் (Astro Physics) என்பது வானியலில் உள்ள ஒரு கிளை ஆகும். இது உலகின் இயற்பியல் பற்றி ஆராய்ச்சி செய்கிறது.
7. ஐக்கிய நாடுகளில் வானியல் துறையில் வெறும் 6000 வானியல் ஆய்வாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். அதிக வானியல் ஆய்வாளர்கள் பேராசிரியராக இருக்கின்றனர்.
8. வானியல் ஆய்வாளர்கள் ஒரு பகுதியில் மட்டுமே சிறந்து விளங்குவார்கள். கருந்துளையை (Black hole) பற்றி ஆராய்வது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
9. வானியல் பேராசிரியர்கள் ஒரு வருடத்திற்கு 50,000 முதல் 1,05,000 வரை சம்பளம் பெறுகின்றனர்.
10. கிமு 500 ஆம் ஆண்டுகளில் தான் முதன் முதலில் கிரேக்க தத்துவஞானி விண்மீன்கள் பற்றிய கூற்றுகளை வெளியிட்டார்.
11. அரிஸ்டாட்டில் என்பவர் தான் முதலில் பூமி உருண்டை வடிவம் என்பதை கண்டுபிடித்துள்ளார். மேலும் அவர் பிரபஞ்சம் பூமியை சுற்றி வருவதாகவும். சூரியனைச் சுற்றுவதில்லை என்றும் கூறினார்.
12. பின்னர் நிக்கோலஸ் காப்பர் நிக்கஸ் என்பவர் பிரபஞ்சத்தின் மையம் சூரியனே தவிர பூமி இல்லை என்று கூறினார்.
13. பதினாறாம் நூற்றாண்டில் கலீலியோ தொலைநோக்கியை கண்டுபிடித்தார். பின்னர் அதன் மூலம் வானியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். மேலும் அவர் வியாழனின் சுற்றுப் பாதையில் நிலவுகள் சுற்றுவதை கண்டுபிடித்தார்.
14. மேலும் இவர் நிலவில் மலைகள் (மேடு பள்ளங்கள்) உள்ளதையும் பால்வெளி மண்டலம் பல நட்சத்திரங்களால் ஆனது என்றும் கண்டறிந்தார்.
15. வானியல் ஆய்வாளர்கள் மூன்று கருவிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவைகள்: தொலைநோக்கி, கேமரா மற்றும் ஸ்பெக்ரோகிராப் ஆகியனவாகும்.
16. டானிஷ் நோபல்மேன் என்ற வானியல் ஆய்வாளர் விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளைப் பற்றி கண்டறிந்துள்ளார்.
17. நவீன வானியலின் நிறுவனர் என்று அழைக்கப்படுபவர் கெப்லர். இவர் ஒரு கணிதவியலாளர், வானியல் ஆய்வாளர் மற்றும் ஜோதிடர். கோள்களைப் பற்றிய மூன்று முக்கிய விதிகளை கூறியவர்.
18. 1557 ஆம் ஆண்டு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். மேலும் 1580 ஆம் ஆண்டில் சந்திர கிரகணம் பற்றி கூறினார். 1611 ஆம் ஆண்டில் அவர் சொந்தமாக ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார் (கெப்லரியன் தொலைநோக்கி).
19. 1781 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் தன் வீட்டில் செய்த தொலைநோக்கியை வைத்து யுரேனஸ்-ஸை கண்டுபிடித்தார். மேலும் அவர் சூரிய குடும்பமானது நாம் நினைத்துப் பார்க்க முடியாத தூரத்தில் இருப்பதாகவும் கூறினார்.
20. கிளைடி தாம்பக் (Clude Tombaugh) என்ற அமெரிக்கா வானியல் ஆய்வாளர் நூற்றுக்கணக்கான சிறுகோள்கள் (Asteroid) விண்ணில் இருப்பதாக கண்டறிந்தார். மேலும் அவர் புளூட்டோ என்ற கோளை கண்டுபிடித்தார். பிற்காலத்தில் தான் அது கோள் இல்லை என்று அறியப்பட்டது.
வானியலாளர் (Astronomer) பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Astronomer in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com