தேனீக்கள்: 20 Interesting Facts about Bees in Tamil
தேனீ பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து தேனை உறிஞ்சி சேகரித்துத் தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன. இப்படிப்பட்ட தேனீக்களின் சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் அரிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்:
20 Interesting Facts about Bees in Tamil
தேனீக்கள் பற்றிய 20 சுவாரசியமான மற்றும் அரிய தகவல்கள்
1. தேனீக்கள் மட்டும் தான் மனிதன் உண்ணக்கூடிய உணவை உற்பத்தி செய்யக்கூடிய ஒரே பூச்சி வகை ஆகும்.
2. ஒரு தேனீ 0.00025 பவுண்டு எடை கொண்டதாகும்.நான்கு ஆயிரம் தேனீக்கள் சேர்ந்தால் தான் ஒரு பவுண்டு எடைக்கு சமமாகும்.
3. ஒரு தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் இருக்கும்.அவை 12 பவுண்டு எடை கொண்டதாகும்.
4. தன் வாழ்நாளில் ஒரு தேனீ 1 மேசைக்கரண்டி அளவு தேனை உற்பத்தி செய்கிறது.
5. தேனீக்கள் ஒரு மணி நேரத்தில் 12 மைல் தூரத்திற்கு பறக்கின்றன.
6. தேனீக்கள் 450 கிராம் தேனை உற்பத்தி செய்ய 1,44,000 கிலோ மீட்டர் தூரம் பறக்க வேண்டும்.இது பூமியை மூன்று முறை சுற்றி வருவதற்கு சமமாகும்.
7. தேனீக்கள் தங்களுக்கு தேவையான தேன் மெழுகை உற்பத்தி செய்ய தன் வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள எட்டு ஜோடி சுரப்பிகளின் வழியாக சுரக்கின்றன.
8. ஒரு முறை தேனை சேகரிக்க தேனீக்கள் ஐம்பதிலிருந்து நூறு பூக்கள் வரை தேடி செல்கின்றன.
9. தேனீக்கள் மொத்தம் மூன்று வகையாக வாழ்கின்றன.அவை ராணி தேனீ,வேலைக்கார தேனீ மற்றும் ஆண் தேனீ (ட்ரோன் தேனீ).
10. ராணி தேனீ தான் காலனியில்(தேன் கூட்டில்) மிகப்பெரிய தேனீ. இவை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை உயிர் வாழும்.ஒரே நாளில் 2500 முட்டைகள் இடக் கூடியவை.
11. ராணி தேனீ தன் காலனியில் இருந்து விலகினால் அது 15 நிமிடத்திற்குள் மற்ற தேனீக்களுக்கு தெரிந்துவிடும்.
12. ஆண் தேனீக்கள் இனச்சேர்க்கை க்கு பின் இறந்து விடுகின்றன.
13. பெண் தேனீக்கு மட்டுமே கொடுக்கு இருக்கும்.ஆண் தேனீக்களுக்கு இருக்காது.
14. தேனீக்கள் அரை கிலோ தேனை உற்பத்தி செய்ய 10 கிலோ தேனை உட்கொள்ள வேண்டும்.
15. தேனீக்கள் ஒரு போதும் உறங்குவதில்லை.
16. தேனில் 80சதவீதம் சர்க்கரையும் 20 சதவீதம்தண்ணீரும் உள்ளன.
17. தேனீக்கள் தங்கள் இறக்கைகளை ஒரு நிமிடத்திற்கு 11,400 முறை அடிக்கின்றன.அதனால் தான் அவை பறக்கும் போது சலசலப்பு சத்தம் கேட்கின்றன.
18. தேனீக்கள் தன் கூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கூடியவை.ராணி தேனீ மட்டும் தான் கூட்டில் மலம் கழிக்கும்.அதை வேலைக்கார தேனீக்கள் உடனே சுத்தம் செய்துவிடும்.
19. வயதான தேனீக்கள் கூட்டிற்குள் இறப்பதில்லை.எப்படியேனும் வெளியே சென்று தான் இறக்கின்றன.
20. அன்டார்டிக்கா கண்டத்தை தவிர மற்ற கண்டங்களில் 20,000 க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் உள்ளன.
தேனீக்கள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Bees. We hope today you know something useful!
Images Credit: pixabay.com