மின்சாரம்: 20 Interesting Facts about Electricity in Tamil
மின்சாரம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
மின்சாரம் (Electricity) என்பது மின்னூட்டத்துடன் தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்டத்தின் பாய்வே ஆகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்சாரம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Electricity in Tamil
மின்சாரம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. மின்சாரம் ஒளியின் வேகத்திற்கு ஓடுகிறது. இதன் வேகம் ஒரு நொடிக்கு 1,86,000 மைல்கள் தூரம் ஆகும்.
2. மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மக்கள் மின்னலும் மின்சார மீனும் (எலக்ட்ரிக் மீன்) மட்டுமே வலிமை வாய்ந்தது எனக் கருதினார்கள்.
3. கி.மு 600 ஆம் ஆண்டுகளிலே மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மின்சார கார்கள் 1832 ஆம் ஆண்டுகளிலே கண்டுபிடிக்கப்பட்டது.
4. மின்னல் என்பது இயற்கையில் மின்சாரத்தின் வெளிபாடு ஆகும். இதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 1,30,000 மைல்கள் ஆகும். வெப்பநிலை 54,000°F ஆகும்.
5. மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தவர் பென்ஜமின் ப்ரான்கிலின் ஆவார்.
6. மேலும் இவர் கட்டடங்களை மின்னல் தாக்காமல் காப்பாற்றும் இடிதாங்கியை கண்டுபிடித்தார்.
7. மின்சாரம் காற்று, நீர், சூரிய ஒளி மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.
8. மின்சாரம் மருத்துவத் துறையில் நோயாளிகளுக்கு ஷாக் கொடுத்து தூண்டுதல் ஏற்படுத்துவதற்கு உதவுகிறது.
9. 1880 ஆம் ஆண்டில் நிக்கோலா டெஸ்லா மற்றும் தாமஸ் எடிசன் ஆகியோருக்கு இடையில் மின்சாரத்திற்கான போராட்டம் நடைபெற்றது.
10. டெஸ்லா மாறு மின்னோட்டத்தை கண்டுபிடித்தார். எடிசன் நேர் மின்னோட்டத்தை கண்டுபிடித்தார். இருவருக்கும் இடையில் யாருடையது சிறந்தது என்ற போட்டி நடைபெற்றது. அதில் டெஸ்லாவின் மாறு மின்னோட்டம் தான் வென்றது.
11. அதிக மின்சாரத்தை உபயோகப்படுத்தும் நாடு ஐஸ்லேண்ட் ஆகும். இங்கு ஐக்கிய நாடுகளை விட 23% அதிகம் உபயோகிக்கப்படுகிறது.
12. உலகின் மிகப்பெரிய மின்சார பல்பு தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவு டவரில் உள்ளது. இதன் உயரம் 14 அடி மற்றும் எட்டு டன் எடை கொண்டதாகும்.
13. ஐக்கிய நாடுகளில் சராசரியாக ஒரு வருடத்தில் 11,000 கிலோ வாட் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
14. ஐக்கிய நாடுகளில் முதன் முதலில் மத்திய மின் நிலையம் அமைத்தது பியர்ல் ஸ்டேசனில் தான். இது 1882 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 85 வாடிக்கையாளர் களுக்கு மின்சாரம் அளிக்கப் பட்டது.
15. மின்சாரம் மூடிய குழாய்களில் (சர்கியூட்) மட்டுமே செல்லக் கூடியவை. ஏனெனில் எலக்ட்ரான்கள் திறந்த பரப்பில் செல்லாது.
16. மின்சாரம் நமது உடலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதயத்தில் உள்ள சதையின் செல்களில் மின்சாரம் இதயத்தை சுருங்குவதற்கு உதவுகிறது. இதன் மூலமாக தான் ஈசிஜி எடுக்கப்படுகிறது.
17. எலக்ட்ரிக் ஈல் வலிமையாக மின்சாரத்தை ஏற்படுத்துகிறது. தற்காப்புக்காகவும் வேட்டை ஆடுவதற்காகவும் 500 வோல்ட் உண்டாக்குகிறது.
18. மின் உற்பத்தி அதிகம் உண்டாக்குவதற்கான சிறந்த மூலக்கூறு நிலக்கரி ஆகும்.
19. LED பல்புகள் மற்றவைகளை விட 80% குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது.
20. மைக்ரோவேவ் ஓவனைவிட டிஜிட்டல் கடிகாரம் அதிக மின்சாரத்தை உபயோகப்படுத்துகிறது என்பது ஆச்சரியமான ஒன்று.
மின்சாரம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Electricity in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com