உடற்பயிற்சி: 15 Interesting Facts about Exercise in Tamil
உடற்பயிற்சி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
உடற் பயிற்சி [Exercise] என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. உடற்பயிற்சி பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்:
15 Interesting Facts about Exercise in Tamil
உடற் பயிற்சி பற்றி 15 சுவாரஸ்யமான உண்மைகள்
1. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த முடியும்.
2. உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.
3. உடற்பயிற்சி மூலம் அசைவற்றிருக்கும் உறுப்புகளை, அல்லது போதிய அசைவின்றியிருக்கும் உறுப்புகளை சீரான இரத்தச் சுற்றோட்டத்துக்கு உட்படுத்தலாம்.
4. இன்றும் சில கிராமங்களில் இளவட்டக்கல் தூக்குவது, வழுக்குமரம் ஏறுவது போன்ற அருமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்துமே நமது உடல் உழைப்பு சார்ந்த உடல் இயக்கத்துக்கு தேவையான வலுப்படுத்தும் பயிற்சிகளாகவே அமைகிறது.
5. உடற்பயிற்சியைப் பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக இருந்தாலும், சீன உடற்பயிற்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனது வரலாற்றைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
6. உடற்பயிற்சி செய்யும் போது மனதிற்கு பிடித்த பாடல்கள் கேட்டால் 15 சதவீதம் உடற்பயிற்சி செய்பவர்களை ஊக்குவிக்குமாம்.
7. உடற்பயிற்சி செய்வதால் மூளையில் புதிய செல்கள் உருவாகின்றன. மூளையின் ஆற்றல், வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை மேம்படுகிறது.
8. ஒரு மைல் தூரத்தை பத்து நிமிடத்தில் ஓடி கடந்தால் 104.3 கலோரிகளை எரிக்கலாம்.
9. வாரத்தில் மூன்று முறை 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால் விரைவில் வயதான தோற்றம் வருவதை தவிர்க்கலாம்.
10. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இவர்களுக்கு மற்றவர்களை விட சற்று குறைவாகவே நோய் தொற்று ஏற்படுகின்றன.
11. உடற்பயிற்சி செய்வதால் வியர்வை சுரப்பிகளின் மூலம் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறுகின்றன. இதனால் நமது உடலில் பொழிவு உண்டாகிறது.
12. தூக்கமின்மை உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்தால் மன நிம்மதி ஏற்பட்டு தூக்கம் நன்றாக வருமாம்.
13. உடற்பயிற்சி செய்யாதவர்கள் தனது 65 ஆவது வயதில் 80% தசை வலிமையை இழக்கின்றனர்.
14. 30 சதவீத மக்கள் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைந்து மன நிம்மதி அடைவதை உணர்வதாக கூறுகின்றனர்.
15. உலகில் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே போதுமான உடற்பயிற்சி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சி பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Exercise in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com