நரி: 20 Interesting Facts About Foxes in Tamil
நரி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நரிகள் நாய் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி, காட்டு விலங்கு ஆகும். உருவத்தில் ஓநாய்களைக் காட்டிலும் இவை சிறியதாகும். நரிகளைப் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Fox in Tamil
நரிகள் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நரி இனமானது ஆஸ்திரேலியாவை தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
2. நரிகளின் கண்கள் இருளிலும் தெளிவாக பார்க்கக் கூடிய திறன் கொண்டது ஆகும்.அதனால் இவை இரவில் வேட்டையாடுகின்றன.
3. இதன் ஒளி உணர்வு நரம்புகளுக்கு பின்னால் மற்றொரு படிமம் உள்ளது. Tapetum lucidum எனப்படும் அந்த படிமம் ஒளியை கண்களுக்குள் பிரதிபலிக்கின்றன. இதனால் நரியின் பார்க்கும் திறனின் தீவிரம் அதிகமாகிறது.
4. நரிகள் canine இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகள் போல கூட்டமாக வாழக்கூடியவை அல்ல. தனித்து வாழக் கூடியவை. தாய் நரி மற்றும் அதன் 6 குட்டிகளுடன் வாழும்.
5. நரிகள் 40 க்கும் மேற்பட்ட ஓசைகளை ஏற்படுத்த கூடியவை.
6. பூமியின் காந்த விசையை வைத்தே தன் இரையின் தூரத்தையும் திசையையும் தீர்மானிக்க கூடிய ஒரே விலங்கு நரிகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சில நரிகள் மனிதர்களுடன் விளையாடக்கூடியவை ஆகும்.
7. நரிகள் ஓராண்டுக்கு ஒரு முறை தான் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் நரி 60 நாட்கள் தன் குட்டியை சுமந்து பெற்றெடுக்கின்றன.
8. பிறந்த நரிகளுக்கு பார்க்க முடியாது நடக்க இயலாது. அதனால் தாய் நரி குட்டியுடன் 3 வாரங்கள் இருக்குமாம். ஆண் நரி மட்டும் வேட்டையாட சென்று விடும்.
9. நரிகள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டது. ஆனால் முயல், பறவை, தவளை, புழு, சிலந்தி, பல்லி, எலி போன்றவற்றையும் உண்ணும். மேலும் இவை பழங்களையும் தாவரங்களையும் கூட உண்ணக் கூடியவை.
10. நரிகளுக்கு செவிப்புலன் மிகத் துல்லியமாக இருக்கின்றன. கடிகார முள் நகரும் ஓசையை 36 மீட்டர் தொலைவில் இருந்து கூட இதனால் நன்கு கேட்க முடியுமாம்.
11. நரிகளின் குகைகள் பெரும்பாலும்புதருக்குள் இருக்கின்றன, சில நேரங்களில் வேருக்கு அடியிலும் உள்ளன.
12. ஆர்டிக் நரிகள் -94 ° F அடையும் வரை அவைகளுக்கு குளிருவதில்லை.
13. ஆர்டிக் நரிகளுக்கு வெள்ளை நிறத்தில் மேற்சட்டை உள்ளன. அவை நரிகளை பனிக்காலத்தில் அதன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.
14. காலநிலைக்கு ஏற்றவாறு அந்த சட்டை நிறம் மாறுகிறது. அரக்கு நிறத்திற்கு மாறுவதால் பாறைகளில் மறைந்து கொள்ள உதவுகிறது.
15. கருப்பு நரி (வெள்ளி நரி எனவும் அழைக்கப்படும்) நரிகள் சிவப்பு நரிக் கூட்டத்தை சேர்ந்தது. ஆனால் அதற்கு சாம்பல் நிற தோல் உள்ளன.
16. நரிகள் ஒரு மணி நேரத்திற்கு 30 மைல் தூரம் ஓடக் கூடியவை.
17. ஆண் நரியின் தலை 26 முதல் 28 அங்குல அளவு கொண்டது. பெண் நரியின் தலை 24 முதல் 26 அங்குல அளவு கொண்டது.
18. சிவப்பு நரியின் வால் அதன் உடலின் பாதி அளவைக் கொண்டது.
19. உலகில் மொத்தம் 37 வகை நரி இனங்கள் உள்ளன. ஆனால் அதில் 12 வகைகள் மட்டுமே உண்மையான நரி என்று கருதப்படுகிறது.
20. நரிகள் 14 வருடங்கள் வரை வாழக் கூடிய தன்மை கொண்டது. ஆனால் சில வருடங்கள் மட்டுமே வாழ்கின்றன.
நரிகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Foxes in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com