தங்கம்: 20 Interesting Facts about Gold in Tamil
தங்கம் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ளப் பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட தங்கத்தின் சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் அரிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்:
20 Interesting Facts about Gold in Tamil
தங்கத்தைப் பற்றி 20 சுவாரஸ்யமான தகவல்கள்
1. நம் பூமியில் 2.44 லட்சம் மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.
2. தங்கம் மட்டுமே மஞ்சள் நிறத்தில் காணப்படும் ஒரே உலோகம் ஆகும். மற்ற உலோகங்கள் ரசாயனக் கலவைக்குப் பின்னரே மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
3. தங்கம் நச்சு தன்மையற்றது எனவே அது உணவோடு உட்கொள்ள உகந்தது.
4. சுத்தமான தங்கத்தை 24 காரட் என குறிப்பிடுகிறோம்.
5. 18 காரட் என்பது 75% சுத்த தங்கம். 14 காரட் என்பது 58.5% சுத்தமான தங்கம் ஆகும். 10 காரட் என்பது 41.7% சுத்த தங்கம் ஆகும்.
6. கிரேக்கம் லிடியாவின் அரசர் க்ரோஸிஸ் தங்கத்தை உருக்கி சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளார்.
7. பின்னர் கி.பி. காலங்களில் ஐக்கிய நாடான கலிபோர்னியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டும் பணி தொடங்கியது.
8. நமது உடலில் 0.2 மில்லி கிராம் அளவு தங்கம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
9. ஒலிம்பிக் கோல்டு மெடலில் 1.34% மட்டுமே தங்கம் சேர்க்கப்படுகிறது.மீதம் உள்ளவை சில்வர் மற்றும் காப்பர் தான்.
10. யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில் தங்கம் இருப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
11. பல கோடி டன் எடையுள்ள தங்கம் சூரியனில் உள்ளது.
12. உலகத்தில் உள்ள கடல்கள் முழுவதிலும் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் இருக்கிறது.
13. ஆரோஃபோபியா என்பது தங்கத்தின் மீதான பயத்தைக் குறிக்கிறது.
14. உலகத்தில் உள்ள அனைத்து தங்கத்தை ஒப்பிட்டால் இந்திய இல்லத்தரசிகளிடம் 11% தங்கம் மட்டுமே உள்ளது.
15. தங்கம் ஒரு சிறந்த வெப்ப கடத்தியாகும். இது வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்த வல்லது.
16. தங்கத்தைக் காற்றில் வைத்தால் நிறம் மங்காது. இரும்பைப்போல துருபிடிக்காது.
17. தங்கம் விண்வெளி உடையிலும், வெப்ப தடுப்புகளிலும், சூரிய கண்ணாடிகளிலும் பயன்படுகிறது.
18. துபாயில் தங்கக் கட்டிகளுக்கான ஏடிஎம் மிஷின் உள்ளது. இதில் இருந்து 10 கிராம் வரை தங்கக் கட்டிகளை எடுக்கலாம் .
19. அலைப்பேசியில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருக்கிறதாக கூறப்படுகிறது.
20. ஐரோப்பாவில் கடல் பயணம் செய்யும் மாலுமிகள் அனைவரும் தவறாமல் தங்கத்தோடு அணிவார்கள். ஏனெற்றால் கடல் பயணத்தின் போது இறந்துவிட்டால் அந்த் தோடு அவர்களை கிறித்தவ முறையில் உடல் அடக்கம் செய்ய உதவுமாம்!
தங்கம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Gold. We hope today you know something useful!
Images Credit: pixabay.com