கினி பன்றி (அ) கினி எலி: 20 Interesting Facts about Guinea Pigs
கினி பன்றிகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
கினிப் பன்றிகள் (Guinea Pigs) அல்லது கினி எலி என்று அழைக்கப்படும் இவை உண்மையில் பன்றிகள் இல்லை, கொறிக்கும் விலங்கு வகையைச் சார்ந்தது. இது கேவிடே குடும்பவகையினுடையது மற்றும் கேவியா விலங்கினப் பிரிவைச் சார்ந்தது. கினிப் பன்றிகள் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Guinea Pig in Tamil
கினி எலி பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. பல பழங்குடி தென் அமெரிக்க குழுக்களின் நாட்டுப்புற கலாச்சாரங்களில் கினிப் பன்றி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. குறிப்பாக அது ஒரு உணவுப் பொருளாக மட்டுமல்லாமல் நாட்டுப்புற மருத்துவம் மற்றும் சமூக மதச் சடங்குகளிலும் இடம்பெறுகிறது.
3. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தியது முதல், கினிப் பன்றி மேற்கத்திய சமூகங்களில் ஒரு வீட்டு வளர்ப்புப் பிராணியாக பிரபலமடைந்து வருகிறது.
4. அவற்றின் அடக்கமான நடத்தை, கையாளுதல் மற்றும் உணவு புகட்டுவதில் அவை காட்டும் புலப்பாடுகள் மற்றும் அவற்றின் மீது காட்டப்படும் பராமரிப்பின் எளிமை ஆகியவை கினிப் பன்றியைத் தொடர்ந்து ஒரு பிரபல வளர்ப்புப் பிராணியாக வைத்திருக்கிறது.
5. கினிப் பன்றிகளின் போட்டி இனப்பெருக்கத்தில் பற்றுடைய நிறுவனங்கள் உலகமெங்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது, மேலும் கினி எலியின் பல்வேறு சிறப்பு இனப்பெருக்கங்கள், பல தரப்பட்ட தோல் வண்ணங்களில் மற்றும் கலவைகளுடன் வளர்ப்பவர்களால் உருவாக்கப்படுகிறது.
6. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்த விலங்குகள் அடிக்கடி மாதிரி உயிரினங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இதன் விளைவாக பரிசோதனைக்கு ஆட்படும் பொருள் ஆங்கிலத்தில் “கினி பன்றி” (Guinea Pig) என்னும் பட்டப் பெயர் ஏற்பட்டது.
7. கினிப் பன்றிகள் உடலில் வியர்வை சுரக்காது.
8. கினிப் பன்றிகள் நெடுநேரம் தூங்காது அவை இடைவெளி விட்டு குட்டி தூக்கம் எடுத்துக் கொள்கின்றன.
9. இவை பிறக்கும் போது உடலில் ரோமம் மற்றும் பற்களுடன் பிறக்கின்றன. பிறந்த சில மணி நேரங்களிலே ஓடக் கூடியவை.
10. கினிப் பன்றிகள் சைவ உணவு சாப்பிடக் கூடியவை. அதன் உடலில் விட்டமின் சி இல்லாததால் விட்டமின் சி உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றன.
11. கினிப் பன்றிகள் அதன் மலத்தையும் உட்கொள்கின்றன. ஏனெனில் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அதில் இருந்து உரிஞ்சி கொள்கின்றன.
12. கினி எலிகள் கூட்டமாக வாழக் கூடியவை. மனிதர்களுடன் விளையாடக் கூடியவை.
13. கினிப் பன்றிகளுள் நீண்ட காலம் வாழ்ந்தது என ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டதன் வயது 14 வருடங்கள் 10 மாதம் ஆகும்.
14. கினிப் பன்றிகளுக்கு முன்னங்காலில் 4 விரல்களும் பின்னங்கால்களில் 3 விரல்களும் உள்ளன.
15. கினி எலிகளின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கக் கூடியவை. இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்குமாம்.
16. கினிப் பன்றிகளின் கண்களில் வெள்ளையாக பால் போன்ற திரவம் சுரக்கின்றன. அவை அதன் கண்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
17. இவை கண்களை திறந்து கொண்டு தூங்கக் கூடியவை. எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்ள இவ்வாறு தூங்குகிறது.
18. மிக கூர்மையான பார்க்கும் திறன் கொண்டது இந்த கினி எலி. 340 டிகிரி கோணத்தில் கினிப் பன்றிகளின் பார்வை திறன் உள்ளது.
19. கினிப் பன்றிகள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை விழித்திருக்கக் கூடியவை. சுறுசுறுப்பானவை.
20. 11 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை கினி எலிகள். புத்திசாலியானவையும் கூட.
கினிப் பன்றிகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Guinea Pigs in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com