முடிச் சாயம்: 15 Interesting Facts about Hair Dye in Tamil
முடிச் சாயம் [Hair Dye] பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
முடிச் சாயம் (Hair dye) என்பது தலையிலுள்ள முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். ஆண் மற்றும் பெண் என்று இரு பாலினத்தவரும் தங்களது தலை முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில் முடிச் சாயத்தைப் பயன்படுத்துகின்றனர். முடிச் சாயம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
15 Interesting Facts about Hair Dye in Tamil
முடிச் சாயம் பற்றி 15 சுவாரஸ்யமான உண்மைகள்
1. எலும்பு மஜ்ஜைக்கு அடுத்து நமது உடலில் வளர்ந்து கொண்டே இருக்கும் திசு தலைமுடியில் உள்ள திசுக்கள் ஆகும். சராசரி மனிதனின் தலையில் 1,00,000 முதல் 1,50,000 வரை தலைமுடி இருக்கின்றன.
2. தலையில் உள்ள ஒரு முடியின் வாழ்நாள் ஐந்து வருடங்கள் ஆகும். காப்பர் ஒயரை விடவும் கடினமானது நம் தலைமுடி.
3. நமது முடி சாம்பல் நிறத்திற்கு மாறுவதற்கான காரணம் மெலனின் உற்பத்தி குறைவதால் ஆகும்.
4. முடிச் சாயத்தை முதல் முதலில் பயன்படுத்துவதற்கு முன் நாம் முதலில் அலர்ஜி தேர்வு செய்து பார்க்க வேண்டும். நமது உடலின் கைமூட்டு கால் மூட்டு பகுதியிலோ அல்லது காதுகளுக்கு பின் புறமோ சோதனை செய்து பார்க்க வேண்டும்.
5. முடிச் சாயம் சிலருக்கு தோல் நோய் அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்துகிறது மற்றும் உடலில் சில பகுதிகளில் (முகம், கழுத்து) வீக்கம் ஏற்படுத்துகிறது.
6. அமோனியா கலக்கப்பட்ட முடிச் சாயம் ஆபத்தானது ஆகும் என சிலர் அமோனியா இல்லா சாயத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவும் அதே போல் ஆபத்தானது தான்.
7. அமோனியா இல்லா முடிச் சாயத்தில் அமோனியாக்கு பதில் எத்தனால் அமைன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது. இது அமோனியாவை விட சற்று குறைவான நச்சுத் தன்மை கொண்டது ஆகும்.
8. நாம் பயன்படுத்தும் முடிச் சாயத்தில் 5000-திற்கும் மேற்பட்ட கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. இதனை நமது தலையின் ஸ்கால்ப் பகுதி உறிஞ்சி நமக்கு கேடு விளைவிக்கின்றன. இவை கார்சினோஜன் என்ற வேதிப் பொருள் கலப்பதால் ஆகும்.
9. ரூமடாய்ட் ஆர்திரிட்டிஸ் நோய் வருவதற்கான காரணிகளில் முடிச் சாயமும் ஒன்று.
10. நமது தோலின் இயற்கையான நிறம் இந்த முடிச் சாயத்தால் மாறுகின்றன எனக் கூறப்படுகிறது. ஊதா அல்லது சாம்பல் நிறத்திற்கு மாறுகின்றன. சில சமயங்களில் இறப்பைக் கூட ஏற்படுத்தக் கூடியது.
11. ஒளி நிறங்களை விட இருண்ட நிறங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
12. கர்ப்பிணி பெண்கள் முடிச் சாயம் பயன்படுத்துவதால் கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
13. புற்றுநோய் மற்றும் லூகிமியா நோய்கள் கருவிலே ஏற்படும் வாய்ப்புகள் முடிச் சாயம் பயன்படுத்துவதால் வருகிறது.
14. முடிச் சாயத்தால் முதியவர்களுக்கு பிளேடர் (சிறு நீரகப்பை) புற்றுநோய் ஏற்படுகிறது. சாயங்களில் உள்ள கார்சினோஜன் என்ற வேதிப் பொருள் தான் இதற்கு காரணம்.
15. முடிச்சாயத்தால் வரும் துர்நாற்றம் வருவதற்கான காரணம் சாயத்தில் உள்ள பெர்ராக்ஸைடு நமது முடியில் உள்ள புரதத்தோடு கலக்கும் போது சல்பரை வெளியிடுகிறது. அதனால் தான் துர்நாற்றம் வீசுகிறது.
முடிச் சாயம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Hair Dye in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com