ஐஸ்கிரீம்: 20 Interesting Facts about Ice Cream in Tamil
ஐஸ்கிரீம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஐஸ்கிரீம் அல்லது பனிக்கூழ் என்பது பால், கிரீம் போன்ற பால் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ஆகியன கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும். பாற்பொருட்கள் இன்றிச் சோயாப் பால் போன்றவற்றைப் பயன்படுத்தியும் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் [குளிர்களி] வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி போன்ற சுவைத் தன்மைகளுடன் தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Ice Cream in Tamil
ஐஸ்கிரீம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ஒரு கலூன் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு 12 பவுண்டு பால் தேவைப்படுகிறது.
2. உலகிலேயே ஐஸ்கிரீம் அதிகம் உட்கொள்கின்ற நாடு அமெரிக்கா தான் ஆகும். இதற்கு அடுத்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நார்வே ஆகும்.
3. ஐஸ்கிரீமில் மிகவும் பிரபலமான சுவை வெண்ணிலா தான். அதன் பிறகு சாக்லேட். ஆனால் வெண்ணிலாவிற்கு முன்னரே சாக்லேட் சுவை கண்டுபிடிக்கபட்டது எனக் கூறப்படுகிறது.
4. முதன் முதலில் ஐஸ்கிரீம் செய்முறை புத்தக வடிவில் எழுதப்பட்டது 1665 ஆம் ஆண்டு ஆகும்.
5. 1851 ஆம் ஆண்டுகளில் இருந்து தான் அமெரிக்காவில் தொழிற்சாலைகளில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டது.
6. 90 சதவீதம் அமெரிக்கர்கள் ஐஸ்கிரீமை தங்கள் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் உள்ள உறைவிப்பானில் (Freezer) வைத்திருக்கின்றனர்.
7. உலகின் உயரமான ஐஸ்கிரீம் இத்தாலியில் உள்ள கோன் ஐஸ் தான். இதன் உயரம் 9 அடி ஆகும்.
8. உலகின் மிகப்பெரிய ஐஸ்கிரீம் சண்டே கனாடாவின் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் 1988 ஆம் ஆண்டு பாம் டைரிஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது தான். இதன் எடை 24 டன்கள் (54,914 பவுண்டு) ஆகும்.
9. 1903 ஆம் ஆண்டுகளில் தான் கோன் ஐஸ் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இது ஒரு விபத்து என்று தான் கூற வேண்டும். ஏனெனில் உலகப் பொருட்காட்சி நடந்த விழாவில் ஐஸ்கிரீம் கப் இல்லாததால் மாற்று வழிக்காக பேப்பரில் கோன் போன்று சுருட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே கோன் பழக்கத்திற்கு வந்தது என கூறப்படுகிறது.
10. ஐஸ்கிரீமில் பல சுவைகள் (flavour) உள்ளன. அதில் மிகவும் வித்தியாசமானது ஹாட் டாக் சுவை ஆகும்.
11. பசு மாடு தன் வாழ்நாளில் 9000 கலூன் ஐஸ்கிரீம் செய்வதற்கு தேவையான பாலை கொடுக்கிறது.
12. ஐக்கிய நாடுகளில் ஜுலை மாதத்தை தேசிய ஐஸ்கிரீம் மாதமாக தெரிவித்துள்ளனர்.
13. ஐக்கிய நாடுகளில் கலிபோர்னியா தான் அதிக ஐஸ்கிரீம் உற்பத்தி செய்கிறது.
14. 2003 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் மட்டுமே 121 மில்லியன் கலூன் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
15. ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீமில் 273 கலோரிகள் உள்ளன.
16. இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெற்றியை கொண்டாடும் விதமாக போர் வீரர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.
17. ஜான் ஹாரிசன் என்பவர் ஐஸ்கிரீமை சுவை பார்க்கும் வேலையை செய்து வருகின்றார். இவரது நாக்கு பல மில்லியன் டாலர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
18. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஐஸ்கிரீம்காக செலவழிக்கப்பட்டது 6 பில்லியன் டாலர் ஆகும். ஒரு தனி நபருக்கு 40 டாலர் வரை செலவிடப்பட்டுள்ளது.
19. 1940 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் போலியோ வருவதற்கான காரணம் ஐஸ்கிரீம் என்று கருதினார்கள். ஏனெனில் வெயில் காலங்களில் அதிக அளவில் போலியோ ஏற்பட்டதால் இவ்வாறு நினைத்தார்கள்.
20. மிகப் பிரபலமான ஐஸ்கிரீம் டாப்பிங்க் சாக்லேட் சிரப் தான் என்று கூறப்படுகிறது.
ஐஸ்கிரீம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Ice Cream in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com