உடல் பருமன்: Interesting Facts About Obesity
உடல் பருமன் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்
கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு என்கிறோம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதிகமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. உடல் பருமனை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
Interesting Facts About Obesity in Tamil
1. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கூற்றின்படி ஆண்டு தோறும் 2.8 மில்லியன் முதியோர்கள் உடற்பருமனால் இறக்கின்றார்களாம்.
2. தற்போதைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது குறைந்து வருகிறது. உடற்பருமனில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் தற்போது தொழிநுட்பம் அதிகமாகிவிட்டது அதனால் குறைவான உடல் உழைப்பையே மனிதர்கள் செய்கின்றனர். இது முக்கிய காரணம் ஆகும்.
3. தற்போது 30 சதவீத மக்கள் குறைவான உடற்பயிற்சியை செய்கின்றனர். சிறுகுழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதன் காரணமாகவும் உடற்பருமன் ஏற்படுகிறது.
4. 73 பேரில் 63 பேருக்கு குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமன் வந்ததாகவும் அதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததே காரணமாகவும் கூறப்படுகிறது.
5. மிகச் சிலருக்குத்தான் அது மரபுவழியாகவும், சில மருத்துவ காரணங்களினாலும், சில உணவுப் பிரச்சினைகளாலும் ஏற்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
6. மேலும் இது போதிய தூக்கமின்மை, நாளமில்லா சுரப்பிகளால் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், அதிக மருந்துகளை உட்கொள்ளுதல், அதிக உடல் சூடு போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது.
7. அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் ரத்த அழுத்த நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், உறக்கச் சுவாசத்தடை, மலட்டுத்தன்மை போன்றவை ஏற்பட காரணம் உடல் பருமன் ஆகும்.
8. ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு BMI என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது.
9. உலக அளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதன்மையாக உள்ளது. உடற்பருமன் சுட்டானது யாருக்கு அதிகம் (20-25) உள்ளதோ அவருக்கு இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.
10. தினசரி உடலுக்கு தேவையான அளவில் தண்ணீரை எடுத்துக்கொள்வது முக்கியமாகும். எனவே நீங்கள் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனில் தினமும் முடிந்த அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
உடல் பருமன் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Obesity in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com