மழை: 20 Interesting Facts About Rain in Tamil
மழை பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்
மழை கடவுளால் நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்கள், பிராணிகள் மற்றும் தாவரங்கள் செழிப்புடன் உயிர்வாழ மழைநீர் உற்ற தோழனாக இருந்து தோள் கொடுக்கிறது. நமது நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதற்கு மழை ஒரு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. பல உயிர்களின் வாழ்வாதாரம் இந்த மழையே ஆகும். மழை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Rain in Tamil
மழை பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. பூமியில் நிகழும் நீர் சுழற்சியில் மழை முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் ஆவியாகி மேகமாக உருவாகிறது. பின்னர் மீண்டும் மழையாக மாறி பூமிக்கு வருகிறது.
2. மழைத்துளி கண்ணீர்(tear shape) வடிவம் கொண்டதில்லை. இவை உண்மையில் கோள வடிவம் கொண்டவை. இதனின் எதிர்ப்பு பண்புகள் காரணமாக இதன் தோற்றம் மாறுபட்டு காணப்படுகின்றது.
3. மழை எப்பொழுதும் நீராக மட்டுமே இருப்பதில்லை. இதில் வளிமண்டலத்தில் உள்ள சில தூசுகள், மாசுபடுத்திகள் மற்றும் மகரந்தங்களும் கலந்து காணப்படுகின்றன.
4. ஒரு சராசரி மழைத்துளி மணிக்கு 14 மைல் (22 கிலோ மீட்டர்) தூரத்திற்கு விழுகிறது.
5. உலகின் மிகப்பெரிய மழைத்துளியாக பதிவிடப்பட்டதன் விட்டம் 0.3 அங்குலம் (8 மில்லிமீட்டர்) ஆகும்.
6. மழைநீர் தான் நன்னீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர்நிலைகளை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7. வருடம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் மழை பொழிகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாறுபட்ட காலநிலை கொண்டுள்ளது.
8. மழைநீரில் மாசுபட்ட காற்று கலந்து அமில மழை பெய்கிறது. இதனால் மரங்கள் விலங்குகள் பாதிக்கப் படுகின்றன.
9. உயர் பல்லுயிர்கள் மற்றும் பசுமையான தாவரங்கள் கொண்ட மழைக் காடுகள் கணிசமான மழையை ஆண்டு முழுதும் பெறுகின்றன.
10. மழைப் பொழிவு முறையில் சில காரணிகளால் தாக்கம் ஏற்படுகிறது. அவை நிலவியல், நிலப்பரப்பு, காற்று முறை மற்றும் கடல் நீரோட்டம் ஆகியவை ஆகும்.
11. மழையின் தீவிரம் ஒரு மணி நேரத்திற்கு மில்லிமீட்டர் அல்லது அங்குலம் ஆகிய அளவில் கணக்கிடப்படுகிறது. கனமழை என கணிக்கப்பட்டுள்ளது ஒரு மணி நேரத்திற்கு 0.3 அங்குலத்திற்கும் (7.6 மில்லிமீட்டர்) மேற்பட்டது ஆகும்.
12. ப்ளூவியோமீட்டர் மற்றும் ரெயின் கேஜ் ஆகிய கருவிகள் கொண்டு மழை அளவிடப்படுகிறது.
13. மண்வாசனை என்பது மழை மண்ணை தொடும்போது தாவர எண்ணெய்கள், பாக்டீரியா மற்றும் ரசாயன கலவைகள் வெளியேறுவதால் ஏற்படுவது ஆகும்.
14. மழைக்கு மனிதனில் இனிமையான விளைவை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. மழை மனிதனை அமைதியாக்குவதிலும் நிம்மதியாக உணர வைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
15. மழையானது வளிமண்டல நிலைமைகளுக்கு ஏற்றவாறு லேசான தூரல் முதல் மிக கனமழை வரை மாறுபடுகிறது.
16. பாலைவனம் போன்ற வறண்ட இடங்களில் எப்போதாவது தான் மழை பெய்யும் அதிலும் ஆங்காங்கே தான் மழை பொழியக்கூடும்.
17. காலநிலை மாற்றம் பற்றியும், மழையின் தாக்கம் சுற்றுச்சூழல் அமைப்பிலும், மனிதர்களிடத்திலும் ஏற்படுவது குறித்தும் அறிவதற்கு மழைபொழிவின் அளவு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
18. விவசாய உற்பத்தி, பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் உணவு உற்பத்தியை தக்கவைத்தல் போன்றவற்றில் மழை முக்கிய பங்கு வகிக்கிறது.
19. மழை மண்ணில் விழும் சத்தம் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும் இது உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
20. மழைக்கு பின்னர் வரும் வானவில் என்பது சூரியக் கதிர்கள் காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு பிரதிபலிக்கப்பட்டு ஒளிவிலகல் பட்டு அழகிய ஏழு நிறங்கள் கொண்ட வண்ணமிகு வானவில்லாக தோற்றம் அளிக்கிறது.
மழை பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Rain in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com