ரேட்டில் ஸ்நேக்: 20 Interesting Facts about Rattlesnakes
ரேட்டில் ஸ்நேக் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ரேட்டில் ஸ்நேக் [Rattlesnake] என்பது வாலில் கிலுகிலுப்பை உள்ள ஓர் அமெரிக்கன் நச்சு விரியன் பாம்பு ஆகும். ரேட்டில் ஸ்நேக் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Rattlesnake in Tamil
ரேட்டில் ஸ்நேக் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ரேட்டில் ஸ்நேக்குகள் 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பாலைவனம், புல்வெளி, சதுப்பு நிலம் போன்ற இடங்களில் வாழ்கின்றன.
2. ஐக்கிய நாடுகள், மெக்ஸிக்கோ, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
3. மிகவும் நச்சுத்தன்மை கொண்ட இவைகள் வாலில் கிலுகிலுப்பை போன்ற அடுக்குகளை கொண்டது. இது கெரட்டினால் ஆனது. இதனாலே இது ரேட்டில் (Rattle-ஒலி எழுப்பக் கூடியவை) ஸ்நேக் என்று அழைக்கப்படுகிறது.
4. அரிசோனா மாநிலத்தில் தான் இவை அதிகமாக உள்ளன என ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
5. இதில் வெஸ்டர்ன் டைமண்ட் பேக் ரேட்டில் ஸ்நேக் என்பது மிக பெரிய நச்சுத்தன்மை கொண்ட பாம்பு வகையாக கருதப்படுகிறது.
6. இதன் நீளம் 94 அடியும் எடை 34 lbs என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
7. ரேட்டில் ஸ்நேக் இறந்து ஒரு மணி நேரம் கழித்த பிறகும் கூட மனிதர்களை கடிக்க கூடுமாம்.
8. இதன் விஷத்தை முறிக்கும் மருந்துகளின் விலை 20,000 டாலர் ஆகும்.
9. ரேட்டில் ஸ்நேக் தன் ரேட்டிலை நொடிக்கு 50 முதல் 100 முறை ஆட்டுகின்றன.
10. முக்கோண வடிவில் தலை உடைய ரேட்டில் ஸ்நேக் கொடூரமான கோரைப் பற்களைக் கொண்டுள்ளன. அதன் வாயின் மேல் பகுதியில் இந்த பற்கள் உள்ளன.
11. ஐக்கிய நாடுகளில் 7000 க்கும் மேற்பட்ட மக்கள் விஷத்தன்மை கொண்ட பாம்புகளால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர். இதில் தோராயமாக 10 நபர் ரேட்டில் ஸ்நேக் மூலம் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
12. குளிர்காலங்களில் ரேட்டில் ஸ்நேக்குகள் வெளியே வராமல் உறங்குமாம். அது தனியாக இருப்பதில்லை 100 முதல் 1000 கணக்கான பாம்புகள் வரை ஒன்று சேர்ந்து உறங்குமாம்.
13. ரேட்டில் ஸ்நேக்குகள் நீரிலும் நீந்தக் கூடியவை. பல மைல் தூரங்களை கடலுக்குள் கடந்து செல்கின்றன.
14. ரேட்டில் ஸ்நேக் மனிதன் அசையும் நொடிக்குள் தாக்கக் கூடியவை. இதன் வேகம் ஒரு நொடிக்கு 2.95 மீட்டர் உள்ளது.
15. மற்ற பாம்புகளைப் போல் இல்லாமல் ரேட்டில் ஸ்நேக் கண்கள் பூனைகள்ப் போல் செங்குத்தான பாவை கொண்டுள்ளன.
16. இவை முட்டை இடுவது இல்லாமல், பெண் ரேட்டில் ஸ்நேக் 90 நாட்கள் தன் உடம்பில் வைத்திருந்து உயிர்பிக்கின்றது. பிறக்கும் போது முழு அமைப்புடன் வருகிறது.
17. இவை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இனப்பெருக்கம் செய்கின்றன.
18. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் இவை வேட்டையாடி உண்கின்றன. ஏனெனில் இவை அதிகம் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட கூடியவை.
19. இவை எலி, முயல், மூஞ்சூறு, அனில் போன்றவற்றை உண்கின்றன. சில நேரங்களில் பறவைகளையும் வேட்டையாடி உண்ணுமாம்.
20. ரேட்டில் ஸ்நேக்கில் உள்ள ரேட்டில் (கிளுகிளுப்பை) ஒவ்வொரு முறை அந்த பாம்பால் உறிக்கப்பட்ட பின்னும் வளருகிறது.
ரேட்டில் ஸ்நேக் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Rattlesnakes in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com