சூரியன்: 20 Interesting Facts about the Sun in Tamil
சூரியன் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கியமான ஆற்றல் சூரியனிலிருந்தே பெறப்படுகிறது. சூரியன் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about the Sun in Tamil
சூரியன் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. சூரியன் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு கோள வடிவ உருண்டை எனலாம். சூரியன்தான் நம் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் நட்சத்திரம் ஆகும்.
2. நட்சத்திரம் என்பது அதிகபடியான நிறையையும் அதனுள் அணுக்கரு இணைப்பு மற்றும் அணுக்கரு பிளவு நடக்க வேண்டும். இந்த அனைத்து தகுதிகளும் சூரியனுக்கு இருப்பதால் சூரியனை நாம் நட்சத்திரம் என்கிறோம்.
3. நம் சூரியனை போன்றே இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் உள்ளன.
4. இது ஞாயிறு, கதிரவன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது தவிர பகலவன், அனலி, வெய்யோன், ஆதவன், பரிதி, இரவி போன்ற பல தமிழ்ப்பெயர்கள் கதிரவனுக்கு உண்டு. சூரியன் என்பது கதிரவனின் வடமொழிப் பெயராகும்.
5. சூரியனின் வயது 4.603 பில்லியன் வருடம் ஆகும். சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
6. தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தன் வாழ்வின் மிக நிலையான பகுதியில் பாதியளவைக் கடந்துவிட்டது. இது நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வியத்தகு முறையில் மாற்றம் அடையாமல் இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும்.
7. பூமியிலிருந்து சூரியன் சுமார் 148.06 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
8. சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை போல் 28 மடங்கு அதிகம் உள்ளது. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86% நிறையை கொண்டது இந்த சூரியன்.
9. இந்த சூரியன் எந்த அளவுக்கு பெரியதென்றால் கிட்டதட்ட நம் பூமியை போன்று 1,30,000 பூமிகளை சூரியனுக்குள் வைக்கலாம் அந்த அளவுக்கு பெரியது.
10. தற்போதைய துருக்கியைச் சேர்ந்த அனாக்சகோரஸ் என்று அழைக்கப்படும் விஞ்ஞானி மற்றும் தத்துவஞானி சூரியனை ஒரு நட்சத்திரம் என்று கிமு 450 இல் முதன்முதலில் பரிந்துரைத்தார்.
11. 130 மில்லியன் வருடங்களுக்கு பிறகு சூரியன் நமது பூமியை விழுங்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் எரிவதால் சூரியன் விரிவடைய தொடங்கும். இதன் காரணமாக புதன், வெள்ளி மற்றும் நம் பூமியை சூரியன் விழுங்கும்.
12. சூரியன் மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது. இது பால்வெளி மண்டலத்தை சுற்றி முடிக்க 225-300 மில்லியன் ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
13. நமது சூரியனை ஒரு மஞ்சள் நிற நட்சத்திரம் எனலாம். இதன் வெப்பநிலையானது கிட்டதட்ட 5000 டிகிரி செல்சியஸ் முதல் 5700 டிகிரி செல்சிஸ் வரை இருக்கும்.
14. சூரியனின் உண்மையான நிறம் வெளிர்மஞ்சள் ஆகும். சூரிய கதிர் நம் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள துகள்களால் சிதறடிக்கப்படுவதால் நம் கண்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.
15. ஒவ்வொரு 11 வருடத்திற்கும் சூரியன் தன்னுடைய காந்த துருவங்களை மாற்றிக் கொள்கிறது. அதாவது வட துருவம் – தென் துருவமாகவும், தென் துருவம் – வட துருவமாகவும் மாறும்.
16. சூரியன் 26 நாட்களுக்கு ஒருமுறை தன் அச்சில் சுழல்கிறது. சூரியன் வினாடிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது.
17. சூரியன் இல்லை என்றால் பூமி ஒரு நேர்கோட்டில் பயணிக்கும்.
18. நாம் இப்பொழுது பயன்படுத்தும் காலண்டர் சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
19. எகிப்தியன், இந்தோ-ஐரோப்பிய மற்றும் மெசோ-அமெரிக்கன் போன்ற பல பண்டைய கலாச்சாரங்கள் சூரியனை ஒரு தெய்வமாக வழிபட்டன.
20. சூரியன் விண்மீன் மையத்திலிருந்து 24,000-26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
Also, read: 20 Interesting Facts about Solar Energy in Tamil
சூரியன் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about the Sun in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com