மது (ஆல்கஹால்): 20 Interesting Facts about Alcohol in Tamil
ஆல்கஹால் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
பொதுவாக மது (Alcohol) என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என உலகெங்கிலும் கூறிக் கொண்டிருந்தாலும் அதை விரும்புவோர் எண்ணிக்கை குறைவதில்லை என்றே கூறலாம். மதுவை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Alcohol in Tamil
மது (ஆல்கஹால்) பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நாம் சாப்பிடும் பெரும்பாலான காய்கறிகளில் மதுவின் தன்மை மிக சிறிய அளவு இருக்கிறது. மதுவின் அளவு சிறிதளவு நமது உடலுக்கு தேவைப்படுகிறது என்பது உண்மையும் கூட. அளவை மிஞ்சும் போது தான் அது நமது உயிரை உறிஞ்சிவிடுகிறது.
2. உலகிலேயே அதிகமாக ஓல்ட் மங் எனப்படும் மது விற்கப்படும் நாடு இந்தியா தானாம். உலக அளவில் விஸ்கி குடிப்பவர்களில் 50% பேர் இந்தியர்கள் தான்.
3. உலக புகழ்பெற்ற தலைவர்களில் குடியை முற்றிலுமாய் வெறுத்துவர் என அறியப்படுபவர் ஹிட்லர் ஆவார்.
4. உலக அளவில் குடிக்கு பெருமளவில் அடிமையாய் இருந்தவர் என அறியப்படுபவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆவார்.
5. ஒரு ஒயின் பாட்டிலில் ஏறத்தாழ 600 திராட்சைகளின் பங்கு இருக்கிறதாம்.
6. சராசரியாய் ஒரு மனிதனுக்கு 13 வகையான கனிமச்சத்துகள் தேவைப்படுகிறது. அவை அனைத்தும் ஆல்கஹாலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7. மதுவின் தயாரிப்பு ஏறத்தாழ 12,000 வருடங்களுக்கு முன்பே நம் உலகில் நடந்திருக்க கூடும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
8. 1600 ஆண்டுக்கு முன்பு வரை தெர்மாமீட்டரில் மெர்குரிக்கு பதிலாக பிராந்தியைத் தான் உபயோகப்படுத்தி வந்தார்களாம்.
9. பெரும்பாலானோர் மது அருந்துவதனால் உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிக்கிறது என கருதுகின்றனர். ஆனால், உண்மையில் உடலில் தட்பவெப்ப நிலை குறைகிறது.
10. ஐரோப்பாவில் இருக்கும் பெரும்பாலான மேல்நிலை பள்ளிகளின் உணவு விடுதிகளில் மதுவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரப்படுகிறதாம்.
11. மது நம் மூளையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. டோபாமைன் எனப்படும் நரம்பியல் கடத்தியை தூண்டுகிறது.
12. ஒரே அளவிலான மதுவை இளம் வயது ஆணும் பெண்ணும் உட்கொண்டால் அதிக பாதிப்பு ஆணுக்கு தான் ஏற்படுகிறது. ஏனெனில் பெண்களில் மதுவை டீஹைட்ரஜனேஸ் (dehydrogenase) செய்யும் நொதி மதுவை வயிற்றில் உடைக்கிறது.
13. ஒயிட் ஒயினைவிட ரெட் ஒயினில் தான் அதிக ஆல்கஹால் உள்ளது.
14. நாம் குடிக்கும் மில்சேக்குகளில் ஆல்கஹால் கலக்கப்படுகின்றன.
15. உலகின் மிக பிரபலமான மது வோட்கா என்று கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் லிட்டர் பயன்படுத்தப்படுகிறது.
16. 90 PSI அழுத்தமானது சாம்பியன் பாட்டிலில் உள்ளது. ஒரு கார் டயரின் அழுத்தத்தை விட மூன்று மடங்கு அதிகமானது இது.
17. ரஷ்யர்கள் ஒவ்வொரு ஆண்டும் 18 லிட்டர் ஆல்கஹாலை உட்கொள்கின்றனர்.
18. மது தன் எதிர்வினையை மனிதனின் மூளையில் காட்ட 6 நிமிடங்கள் ஆகின்றன.
19. கிமு காலத்தில் இருந்தே மது பயன்பாட்டில் உள்ளது. கிஸா பிரமிட் கட்டுமான பணியில் இருந்த வேலையாட்களுக்கு பீர் வழங்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
20. உடலில் கொழுப்பைவிட சதை ஆல்கஹாலை வேகமாக உரிஞ்சுகிறது. ஏனெனில் சதை அதிகம் உள்ளவர்களுக்கு மதுவின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
ஆல்கஹால் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Alcohol in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com