நீரிழிவு நோய்: 20 Interesting Facts about Diabetes in Tamil
நீரிழிவு நோய் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நீரழிவு (நீர்+அழிவு) Diabetes mellitus இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக் கூடிய வளர்சிதைமாற்றம் ஆகும். இது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுகின்றது. நீரிழிவு நோய் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்:
20 Interesting Facts about Diabetes in Tamil
நீரிழிவு நோய் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நம் உடல் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாத போதும் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பயன்படுத்த இயலாத போதும் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேர்கிறது. இதுவே நீரிழிவு நோயின் காரணம்.
2. இருதயக் குழாய் நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, கால் புண், கண் நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோயால் ஏற்படுகின்றன.
3. இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிக தாகம் எடுத்தல் (polydispia), அதிக பசி எடுத்தல் (polyphagia) ஆகியவை ஏற்படுகின்றன.
4. உலகிலேயே நீரிழிவு நோயாளிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா தான். 35 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்.
5. 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 70 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. நீரிழிவு நோய் மனிதனின் ஆயுட்காலத்தை 5 முதல் 10 வருடங்கள் வரை குறைக்கிறது.
7. புகை பழக்கம் உள்ளவர்கள் மற்றும் அதிக பருமன் கொண்டவர்களுக்கு எளிதில் நீரிழிவு நோய் வந்து விடும்ம்.
8. ஒவ்வொரு 10 நொடிக்கும் உலகளவில் யாராவது ஒருவர் நீரிழிவு நோய் மற்றும் அதன் பாதிப்புகளால் இறக்கின்றனர் .
9. ஒவ்வொரு ஆண்டும் உலகில் 3.5 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் மரணம் அடைகின்றனர். இந்த தொகை அடுத்த பத்து ஆண்டுகளில் 25% உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
10. மூன்றில் ஒரு பங்கு நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதை அறியாமலே இருக்கின்றனர்.
11. இரண்டாம் வகை நீரிழிவு நோயை மருந்துகளால் குணப்படுத்த முடியும் ஒழுங்கான உணவு முறைகளாலும் கட்டுப்படுத்த முடியும்.
12. 90 முதல் 95 சதவீத நீரிழிவு நோயாளிகள் இரண்டாம் வகை நீரிழிவு நோயல் பாதிக்கப்பட்டவர்கள் ஆகும்.
13. ஐக்கிய நாடுகளில் இறப்பிற்குப் காரணமாக உள்ள நோய்களில் நீரிழிவு நோய் 7 ஆவது இடத்தில் உள்ளது.
14. நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின்(INSULIN) உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன.
15. கர்ப்பக்கால நீரிழிவு நோய் குழந்தை பிறந்த பின்னர் குணமாகிவிடும்.
16. நீரிழிவு நோயினை உறுதி செய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவு அளவிடப்படுகின்றது. சாப்பாட்டிற்கு முன் 126 மில்லி கிராம் அதிகமாக அல்லது சாப்பிட்டிற்கு பின் 200 மில்லி கிராம் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.
17. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
18. 20 முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கண் குருடு ஆவதற்கான காரணம் நீரிழிவு நோய் தான் என கூறப்படுகிறது. இது 90% வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
19. நீரிழிவு நோய்கள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் கோளாறு ஏற்படுகிறது.
20. சிறுநீரகம் பாதிப்பு அடைவதற்கு 90% காரணம் நீரிழிவு நோய் என ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Diabetes in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com