புரதம் (புரோட்டீன்): 20 Interesting Facts about Proteins in Tamil
புரோட்டீன் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் ஒன்றாகும். அனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும். புரதம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Protein in Tamil
புரதம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. செல்களின் அமைப்பு, சதைகளின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் அதோடு நமது உடல் உறுப்புகள், ரத்த நாளங்கள், தமனிகள் மற்றும் சுரப்பிகளுக்கு அமைப்பு தருகிறது.
2. நமது உடலில் 18 முதல் 20 சதவீதம் வரை புரதத்தால் ஆனது. புரதம் இல்லாமல் நமது வாழ்வு இல்லை என்றே கூறலாம்.
3. புரதம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. “புரோட்டியோஸ்“(Proteios) என்ற வார்த்தைக்கு முதல் ரகம் அல்லது முதன்மையான என்று பொருள் ஆகும்.
4. புரதம் ( புரோட்டீன்) என்ற வார்த்தை 1883 ஆம் ஆண்டில் இருந்து தான் வழக்கத்திற்கு வந்தது.
5. புரதம் இன்றி நம்மால் வளரவோ காயங்களை சரிசெய்யவோ முடியாது. ஆக்ஸிஜனை சுமந்து செல்வதில் பெரிய பங்கு புரதத்திற்கு உள்ளது. கூந்தல் மற்றும் நகம் வளர்ச்சி, கண் பார்வை திறன், நோய் எதிர்ப்புச் சக்தி, உடலுக்கு தேவையான ஆற்றல் ஆகியவற்றை அளிப்பது புரதம் தான்.
6. நமது உடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வகைகளில் புரதங்கள் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் இரண்டு நாட்கள் அல்லது அதற்கும் குறைவானது.
7. ஆல்புமின் என்ற ஒரு வகை புரதம் இல்லாவிட்டால் நம் உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுமாம்.
8. அதிக அளவில் புரதம் நிறைந்த பாலாடைக்கட்டி பார்மிசன் (Low Sodium Parmesan Cheese) ஆகும். இதில் ஒவ்வொரு 100 கிராம் அளவிலும் 41.6 கிராம் புரதம் உள்ளது.
9. அதிக புரதம் நிறைந்த மீன் மஞ்சள் துடுப்பு சூரை ஆகும். இதன் ஒவ்வொரு 100 கிராமிலும் 30 கிராம் புரதம் உள்ளது. இதோடு நெத்திலி, ஹாலிபட், ஸ்னாப்பர் மற்றும் சால்மன் ஆகிய மீன்களிலும் புரதச் சத்து அதிகம் உள்ளது.
10. புரதம் நமது சாப்பாட்டை திருப்தி அடையச் செய்கிறது. குறைந்த அளவில் சாப்பிட்டாலும் நிறைவாக இருக்கும். இதனால் உடல் எடை கூடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
11. நமது முடி கெரட்டின் என்ற புரதங்களால் ஆனது. இது சல்பர் பிணைப்பால் ஆன புரதம் ஆகும். அதிக சல்பர் பிணைப்பு இருந்தால் முடி சுருளாக இருக்கும்.
12. “கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா?” என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் புரதத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கின்றனர். கோழி தான் முதலில் தோன்றியது என்பது தான் சரி. ஏனெனில் முட்டை ஓட்டில் உள்ள புரதத்தை கோழிகளால் மட்டுமே உருவாக்க முடியும்.
13. நமது உடல் எல்லா வகையான புரதங்களையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வதில்லை. விலங்குகளின் புரதம் நமக்கு உள்ள புரதம் போல இருப்பதால் அது எளிதில் செரிமானம் ஆகிவிடும். தாவரத்தில் உள்ள புரதங்கள் செரிக்க நேரம் ஆகும்.
14. புரதம் 20 அமினோ அமிலங்களால் ஆனது, அதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதது. அதை நாம் உணவு மூலம் தான் எடுத்துக்கொள்ள முடியும். ஏனெனில் அவை நமது உடலில் இருக்காது.
15. 11 அமினோஅமிலங்கள் அத்தியாவசியம் அற்ற புரதங்கள் ஆகும். அவைகளை நமது உடல் உற்பத்தி செய்கிறது.
16. ஒவ்வொரு கிராம் புரதத்திலும் நான்கு கலோரிகள் உள்ளன. நமது உடலில் ஐந்தில் ஒரு பங்கு புரதம் நிறைந்துள்ளது.
17. பூசனி விதையின் ஒவ்வொரு 100 கிராம் அளவிலும் 33 கிராம் புரதம் உள்ளது.
18. தாவரங்களில் உள்ள புரதங்களில் சில தேவையான அமினோ அமிலங்கள் இருக்காது. ஆனால் அவை விலங்குகளில் உள்ள புரதங்களை விட ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து அடங்கி உள்ளன.
19. கினோவா (Quinoa) என்ற தாவரம் புல் வகை தாவரம் போல் தோற்றம் அளிக்கும் தாவரம் ஆகும். இதில் நமது உடலுக்கு தேவையான ஒன்பது வகையான அமினோ அமிலங்களும் உள்ளன. அதிக ஆரோக்கியத்தை தரக் கூடியது.
20. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்று புரதம் நமது உடலில் தங்கிக் கொள்வதில்லை. இவை உடனே உடைக்கப்படுகிறது. இதனால் நமக்கு உடல் எடை கூடாமல் இருக்கும்.
புரதம் (புரோட்டீன்) பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Proteins in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com