மனித மூளை: 20 Interesting Facts about the Human Brain in Tamil
மனித மூளை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நமது உடல் உறுப்புகளில் மிகவும் அதிசய உறுப்பு மூளைதான். மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, ஆறு அறிவு கொண்ட மனித இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். மனித மூளை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about the Human Brain in Tamil
மனித மூளை பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நமது மனித மூளை 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. போதுமான கொழுப்பு இல்லாவிட்டால் மூளை செல்கள் இறந்துவிடும்.
2. 25 வயது வரை நம் மூளை முழுதான அமைப்பு அடையாது.
3. மனித மூளையில் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும். இவை சேர்ந்து ஒரு குவாட்ரிலியன் பிணைப்பை உருவாக்குகிறது.
4. இவ்வாறு உள்ள பிணைப்பால் நமது மூளை எண்ணில் அடங்கா நினைவுகளை சேமித்து வைத்துக் கொள்ள கூடியது ஆகும்.
5. அல்சைமர் நோய் என்பது மூளை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பு ஆகும். இதனால் அந்த பிணைப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளால் நியாபக மறதி ஏற்படுகிறது.
6. மூளையில் தகவல் தொடர்புகள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 268 மைல்கள் செல்கின்றன. இந்த வேகமானது ஃபார்முலா ஒன் ரேஸ் காரை விட அதிகமானது ஆகும்.
7. மூளைக்கும் உடலுக்கும் தகவல்களை பரிமாற தண்டுவடம் தான் உதவுகிறது. மனிதனின் நான்கு வயதில் தண்டுவடம் முழுமையான வளர்ச்சி அடைகிறது.
8. நமது மூளையை 10 சதவீதம் தான் பயன்படுத்துகிறோம் என்பது வதந்தி. உண்மையில் நாம் மூளையை முழுவதும் பயன்படுத்துகிறோம். தூங்கும் போதும் நம் மூளை வேலை செய்கிறது என ஆராய்ச்சியாளர்களால் கூறுகின்றனர்.
9. மனித மூளை 3 பவுண்டு எடை கொண்டதாகும். பெண்களை விட ஆண்களுக்கு மூளை பெரிதாக இருக்குமாம். எனினும் அளவிற்கும் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
10. ஒரு கைப்பிடி மண் அளவு மனித மூளையில் 1,00,000 நியூரான்கள் மற்றும் சைனாப்ஸ்கள் உள்ளன.
11. மனித மூளை 23 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதனால் ஒரு பல்பிற்கு மின்சாரத்தை கொடுக்க முடியும்.
12. மனிதனின் மூளை 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதில் சிறிது நீர்ச்சத்து குறைந்து காணப்பட்டால் அது பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
13. மிகப்பெரிய மூளை கொண்ட விலங்கு எண்ணெய் திமிங்கிலம் (sperm whale) ஆகும். இதன் எடை 20 பவுண்டு ஆகும்.
14. தொன்னூறூ நிமிடங்கள் நமக்கு தொடர்ந்து வேர்த்தால் மூளை சுருங்கி விடும். ஒரு வருடம் வயதானதற்கு சமமான சுருக்கம் ஏற்படுகிறது.
15. நமது மூளைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஐந்து நிமிடம் ஆக்ஸிஜன் செல்லவில்லை என்றால் மூளை செல்கள் இறந்துவிடும். மூளையில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.
16. பிறந்த குழந்தைக்கு தலை பெரிதாக இருக்கும் அதன் காரணம் தொடர்ந்து வளரக்கூடிய மூளையே ஆகும். 2 வயது குழந்தையின் மூளையின் அளவு பெரியவர்களின் மூளை அளவில் 80% இருக்குமாம்.
17. மனித மூளை ஒரு நிமிடத்தில் 48.6 எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. அதாவது ஒரு சராசரி மனிதன் ஒரு நாளில் 70,000 எண்ணங்களை பற்றி சிந்திக்கிறான்.
18. ஒவ்வொரு நிமிடமும் நமது மூளைக்கு 75,01,000 மில்லி லிட்டர் இரத்தம் அனுப்பப்படுகிறது. அதாவது இந்த இரத்தத்தின் மூலம் ஒரு பாட்டில் ஒயின் அல்லது சோடாவை நிரப்ப போதுமானது ஆகும்.
19. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மூளை 2.71 பவுண்டு எடை கொண்டதாகும். சராசரி மனித மூளையின் எடையை விட 10% குறைந்தது. ஆனால் அதில் நியூரான்களின் அடர்த்தி அதிகமாக இருந்தது.
20. ஹிப்போகேம்பஸ் என்பது மூளையின் ஒரு பகுதி ஆகும். மூளையின் நினைவு மையம் என்றழைக்கப்படுவது. இது லண்டனில் உள்ள கேப் ஓட்டுநர்களுக்கு பெரிதாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் லண்டனில் 25,000 வீதிகளை நினைவில் வைத்திருப்பதால் என்று கூறப்படுகிறது.
மனித மூளை பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about the Human Brain in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com