ஆப்பிள்: 20 Interesting Facts about Apples in Tamil
ஆப்பிள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் மருத்துவரை அணுக தேவையே இல்லை என்பது பழமொழி. கி.மு காலங்களில் இருந்தே ஆப்பிள் உலகம் முழுவதும் பிரபலமாக்கப்பட்டது. மத்திய ஆசியாவில் தான் முதலில் ஆப்பிள் பயிர் செய்யப்பட்டது. ஆப்பிளை சாப்பிடுவதால் நோயிலிருந்து காத்திடலாம் என்பது அனைவரும் அறிந்ததே.ஆப்பிளை பற்றி தெரியாத உண்மைகளை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Apples in Tamil
ஆப்பிளைப் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ஹிஸ்டமின் என்ற வேதிப்பொருள் உடலில் எதிர்ப்பு வினையை உருவாக்கும்.இதன் காரணமாக தான் அலர்ஜி உண்டாகிறது. இதனை கட்டுப்படுத்தும் க்வெர்செடின் என்ற பொருள் ஆப்பிளில் நிறைய உள்ளது. இதனால் உடலில் உண்டாகும் அதிகப்படியான அலர்ஜியை தடுக்கலாம்.
2. பச்சை ஆப்பிளை நுகர்வதால் ஒற்றை தலைவலி குணமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூப்பித்துள்ளனர். அதோடு முழங்கால் வலியும் குணமாகுமாம்.
3. ஆப்பிள் லெதர் என்பது ஆப்பிளின் தோலினால் செய்யப்பட்ட ஒரு நொறுக்குத்தீனி ஆகும். இது சத்துக்கள் நிறைந்த உடலுக்கு கேடுகளைத் தராத நொறுக்குத்தீனி ஆகும்.
4. பழங்கள் காயாக இருந்தால் அதனை பழுக்க வைக்க ஆப்பிளை பயன்படுத்தலாம். காயாக இருக்கும் பழங்களோடு பழுத்த ஆப்பிளை வைத்தால் ஒரே நாளில் பழுத்து விடும்.
5. ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கலை குணமாக்குகிறது. குடல் பாதையில் உள்ள நுண் கிருமிகளைக் கொல்கிறது. ஆப்பிளை மென்று சாப்பிடுவதால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள நுண் கிருமிகள் நீங்குகின்றன.
6. ஆப்பிளில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
7. ஆப்பிள் பழத்தில் ஆன்டி– ஆக்ஸிடென்ட் ஆன க்யூயர்சிடின் அதிகமாக உள்ளது. இதனால் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரிக்கிறது. நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வழங்குகிறது.
8. நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் 14% ஆப்பிளில் உள்ளது.
9. ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் நமது மூளையை அல்சைமர் மற்றும் நரம்பியல் கடத்திகள் நோய்களில் இருந்து காக்கிறது. நினைவாற்றல் இழப்பில் இருந்து காக்கிறது.
10. ஆப்பிளில் உள்ள ப்ளோரிசின் வயதான சருமத்தை நீக்க உதவுகிறது. அபிஜெனின், ஜெனீஸ்டீன் மற்றும் பிற பாலிஃபீனால்கள் உங்கள் சருமத்தை சூரிய ஒளி, புற ஊதா கதிர்களால் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளில் இருந்து காக்கிறது.
11. சருமத்தில் ஏற்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தடுக்கிறது. ஆப்பிள் தோல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
12. ஆப்பிள் சிடிகர் வினிகரில் கூந்தலை அலசினால் தலையில் உள்ள நச்சு வாய்ந்த ஷாம்புவின் ரசாயனங்கள் அகன்றுவிடும்.
13. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் வாதம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
14. ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூசாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியும் அதிகரிக்கும்.
15. ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை சருமத்தை பளபளக்க வைக்க உதவுகிறது.
16. ஆப்பிளில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் நம் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாவை அதிகரிக்கிறது.
17. இந்த பாக்டீரியாக்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
18. ஒரு கப் அளவு ஆப்பிளில் 2.6 கிராம் அளவு நார்ச்சத்து அடங்கி உள்ளன.
19. சுமார் 38 ஆயிரம் பெண்களிடம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னராக நடத்தப்பட்ட ஒரு தொற்றுநோய் ஆய்வில், ஆப்பிளை ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு சாப்பிடுவதால் வகை 2 நீரிழிவு நோய் வருவதை 28 சதவீதம் குறைக்கிறது. மேலும் கணையத்தில் உள்ள செல்கள் சேதமடைவது தடுக்கப் படுகிறது.
20. ஆப்பிளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் குவர்செடின் போன்றவை பெரிதும் காணப்படுகிறது.இது கண் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கராட்டினாய்டுகளின் விழித்திறை நிறத்தினை அறிய உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்கள் முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஆப்பிள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Apples in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com