யானை: 20 Interesting Facts about Elephants in Tamil
யானை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும்.மனிதர்கள் தவிர்த்து மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை.யானை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Elephant in Tamil
யானைகள் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. யானைகள் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை ஆகும். கூட்டமாக வாழக் கூடியவை.
2. யானைகள் அதிக ஞாபக சக்தி கொண்டவை ஆகும். தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது 5 கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது.
3. விலங்குகளில் டால்பின்களுக்கு அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
4. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும்.
5. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.
6. யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத் திறனையுமே நம்பி வாழ்கிறது.
7. இவற்றின் தும்பிக்கையும் உணர் திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.
8. ஆப்பிரிக்க நாட்டினைச் சார்ந்த சவானா என்ற யானையே உலகின் மிகப்பெரிய யானை ஆகும். இதன் எடை 6,000 கிலோ ஆகும். இதன் உயரம் மூன்று மீட்டர் ஆகும்.
9. யானைக்கு உள்ள தந்தம் அதன் பற்கள் ஆகும். இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்!
10. இந்த யானை தந்தம் ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே உண்டு; பெண் யானைகளுக்குக் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் தந்தம் உண்டு.
11. யானையின் தும்பிக்கை மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது.
12. யானைகள் ஒரு நாளில் முக்கால் பங்கு நேரத்தை உண்பதற்காக செலவிடுகின்றன. இவை ஒரு நாளில் 150 கிலோ உணவை உண்கின்றன. இவைகளில் பாதி உணவு செறிமானம் ஆகாமலே போகின்றன.
13. யானைகள் அதிர்வுகள், உடல் அசைவுகள் மற்றும் மனிதர்கள் காதுகளுக்கு கேட்காத குறைந்த ஒலி கொண்ட ஓசையின் மூலம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கின்றன.
14. 90 சதவீத ஆப்பிரிக்க யானைகள் தந்தத்தின் வணிகத்தினால் அழிக்கப்பட்டுவிட்டன.
15. யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரே ஒரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும்.
16. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும்.
17. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது.
18. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.
19. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும்.
20. யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.
Also, read: நீர்யானை: 20 Interesting Facts about Hippos in Tamil
யானைகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Elephants in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com