எறும்பு: 20 Interesting Facts about Ants in Tamil
எறும்புகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
சுறுசுறுப்பிற்கு உதாரணமாக கூறப்படுபவை எறும்புகள். இவை குழுவாக வாழும் ஆறு கால்கள் கொண்ட பூச்சி இனமாகும். நாம் வசிக்கும் எல்லா இடங்களிலும் காணப்படும் மிக சிறிய உயிரினமானது இது. அவற்றினைப் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Ants in Tamil
எறும்புகளைப் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. எறும்புகள் குளிர்ந்த கண்டங்களாகிய அண்டார்டிக் மற்றும் ஆர்க்டிக் கண்டங்களில் மட்டும் இருக்காது.
2. எறும்புகள் மனிதனை விட பல மடங்கு பலம் கொண்டது. அதன் எடையை விட 10 லிருந்து 50 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கி செல்கின்றன.
3. ஆசிய நெசவாளர் எறும்பு (Weaver Ants) அதன் எடையை விட 100 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கி செல்லக்கூடியவை.
4. எறும்புகள் காலனி அமைத்து வாழ்கின்றன; ஒரு காலனியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட எறும்புகள் உள்ளன. அவைகளுக்கு குறிப்பிட்ட பொறுப்புகள் வகுக்கப்பட்டுள்ளன.
5. மூன்று வகையான எறும்புகள் உள்ளன. அவை ராணி எறும்பு (மிகப்பெரிய எறும்பு), வேலைக்கார எறும்புகள், சாரணர் எறும்புகள் (குறைந்த வேலை கொண்ட எறும்புகள்).
6. சாரணர் எறும்பு (Scout Ant) என்பவை உணவு தேடி வெளியே செல்கின்றன. இவற்றிற்கு திசைகளை உணரும் சக்தி அதிகம் உள்ளது.
7. சாரணர் எறும்புகள் உணவைக் கண்டவுடன் புற்றிற்கு செல்கின்றன. வழியில் உணவுகளை அடையாளத்திற்காக போட்டுக் கொண்டே செல்கின்றன. அதை பின்தொடர்ந்து சென்று உணவை எடுத்து வருவது வேலைக்கார எறும்புகள்.
8. எறும்புகளின் உடலில் சுவாச அமைப்பு கிடையாது. அதற்கு பதில் உடலைச் சுற்றி ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளன.
9. எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. நிலத்தின் அதிர்வை கொண்டு பொருட்களை அதிர்ந்து கொள்கின்றன. அவற்றின் முழங்காலுக்கு கீழ் அமைந்துள்ள துணை உறுப்புகள் இந்த அதிர்வை உணரச் செய்கின்றன.
10. எறும்புகள் உலகில் எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிட முடியவில்லை. ஆனால் 1 மனிதருக்கு 1 மில்லியன் என்ற அளவிற்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
11. எறும்புகள் தங்களுக்குள் சண்டையிட தொடங்கினால் இறக்கும் வரை சண்டையிடுமாம்.
12. எறும்புகள் தங்களுக்கானவற்றை தாங்களே பயிரிடுகின்றன. மனிதர்கள் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு முன்பிருந்தே எறும்புகள் பயிரிட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகின் முதல் விவசாயிகள் எறும்புகள் தான் என்பது ஆச்சரியமான உண்மை.
13. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளது. ஒன்று தனக்கான உணவை வைத்திருக்கும். மற்றொன்று பிற எறும்புகளுக்கான உணவை சேமித்து வைத்திருக்கும்.
14. உலகின் மிகப்பெரிய எறும்பு புற்று அர்ஜென்டினா நாட்டில் 2000 ஆம் வருடம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அகலம் 3700 மைல் தொலைவாகும்.
15. புல்லட் எறும்புகளுக்கு மிகவும் வலிமையுடைய கொடுக்குகள் உள்ளன. பனாமா காடுகளில் வாழும் இந்த வகை எறும்புகள் கடித்தால் புல்லட் தாக்கியதைப் போல இருக்குமாம்.
16. மற்ற பூச்சிகளைப் போல் இதன் வாழ்நாள் சில நேரங்களிலோ நாட்களிலோ முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.
17. அமேசான் காடுகளில் வாழும் தீ எறும்புகள் தங்கள் கால்களை ஒன்றாக பினைத்து தெப்பம் போல் உருவாக்குகின்றன. இதனால் ஆறுகளில் மிதக்க ஏதுவாக இருக்கும்.
18. எறும்புகள் மிக்க பற்றுடன் உள்ளவை. காலனியில் ராணி எறும்பு இறந்து விட்டால் சில மாதங்களிலே மற்ற எறும்புகளும் இறந்து விடுமாம்.
19. உலகின் ஆற்றல் மிக்க பூச்சி இனம் எறும்புகள் தான். எறும்புகளுக்கு 2,50,000 மூளை செல்கள் உள்ளன.
20. எறும்புகள் முட்டைகளை வேறு காலனியில் இருந்து திருடுகின்றன. அவை பொரித்த பின்னர் அந்த எறும்புகளை வேலைக்கு வைத்து கொள்கின்றன.
எறும்புகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Ants. We hope today you know something useful!
Images Credit: pixabay.com