கரப்பான் பூச்சி: 20 Interesting Facts about Cockroaches in Tamil
கரப்பான் பூச்சி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
கரப்பான் பூச்சி (Cockroach அல்லது Roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்கு உயிரியாகக் காணப்படுகிறது. கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். கரப்பான் பூச்சி பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Cockroach in Tamil
கரப்பான் பூச்சி பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ஹீமோகுளோபின் என்ற நிறமி இல்லாததால் கரப்பான் பூச்சிகளின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது.
2. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.
3. அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணாமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
4. கரப்பான் பூச்சிகள் 40 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கிக் கொள்ளக் கூடியவை. தண்ணீரில் மூழ்கினாலும் அரை மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.
5. ஒரு மணி நேரத்தில் இவை மூன்று மைல் தூரம் ஓடக் கூடியது.
6. ஜெர்மனில் பிறக்கும் கரப்பான் பூச்சிகள் 36 நாட்களில் பெரிதாகி விடுகின்றன.
7. ஒரு நாள் வயதுடைய கரப்பான் பூச்சிகள் அதன் பெற்றோரைப் போன்ற அளவுக்கு ஓடக் கூடிய சக்தி கொண்டது ஆகும்.
8. உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி ஆறு அங்குலம் கொண்டதாகும். இது தென் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்ததாகும்.
9. கரப்பான் பூச்சிகள் மிகவும் பழமையானது. இவைகள் 280 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வாழ்கின்றன எனக் கூறப்படுகிறது. கார்போனிபெரஸ் காலத்தில் இருந்தே வாழ்கின்றன எனக் கூறப்படுகிறது.
10. உலகில் மொத்தம் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் உள்ளன.
11. இதில் மிகவும் பிரபலமான கரப்பான் பூச்சி ஜெர்மன் கரப்பான் பூச்சிகள் ஆகும். ஐக்கிய நாடுகளில் மட்டுமே 70 கரப்பான் பூச்சி இனங்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது.
12. கரப்பான் பூச்சிகள் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு உயிர் வாழக் கூடியவை. தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் வரை உயிர் வாழ்கின்றன.
13. கரப்பான் பூச்சிகள் எல்லா உணவு வகைகளையும் உண்ணக் கூடியவை. இவை இறைச்சி, இனிப்பு, இறந்த பூச்சிகள், மனித உணவுகள், பேப்பர், துணி, மரம் போன்ற அனைத்தையும் உண்ணக் கூடியவை.
14. இவை மிகவும் வலிமையானவை கூட. இதன் எடையை விட 900 மடங்கு அதிகம் கொண்ட எடையை இதனால் தாங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
15. பெண் கரப்பான் பூச்சிகள் ஒரு முறை பெறப்பட்ட விந்தணுக்களை தன் உடம்பில் சேகரித்து வைத்துக் கொள்கின்றன.
16. பெண் கரப்பான் பூச்சிகள் ஒரு வருடத்தில் 150 குட்டிகள் இடுகின்றன.
17. சிலர் கரப்பான் பூச்சிகளை வளர்ப்பு பிராணியாக வளர்க்கின்றனர் என்பது ஆச்சரியமூட்டும் உண்மை ஆகும்.
18. லீப் ரோச் என்ற ஒரு வகை கரப்பான் பூச்சிகள் வெட்டுக்கிளி போல குதிக்கக் கூடியவை ஆகும்.
19. கரப்பான் பூச்சிகள் நமது கண் பார்வையில் இருந்து மறைந்தே வாழக்கூடியவை. ஒரு வேலை நம் கண்களில் அவை தென்பட்டால் நிச்சயம் அந்த இடத்தில் நுற்றுக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருக்கும் என்றே பொருள்.
20. கரப்பான் பூச்சிகள் நில அதிர்வுகளை உணரக்கூடியவை. நாம் வருவதை அதிர்வுகளின் மூலம் கண்டு பிடித்து நம் கண்களில் படாமல் மறைந்து கொள்கின்றன.
கரப்பான் பூச்சிகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Cockroaches in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com