தாடி டிராகன்: 20 Interesting Facts about Bearded Dragons
தாடி டிராகன் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
தாடி டிராகன் [Bearded Dragon] என்பது ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இது வடக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படுகின்றன. தாடி டிராகன் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Bearded Dragons in Tamil
தாடி டிராகன் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. இது ஆஸ்திரேலியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. டைனோசர் [Dinosaurs] இருந்த காலங்களில் இருந்தே இவை இருக்கின்றன. 1990-களுக்கு பின்னர் தான் மற்ற இடங்களுக்கு சென்றது.
2. இதன் தாடையில் முற்கள் தாடி போன்ற அமைப்பில் இருக்கின்றன. இதன் காரணமாக தான் இதற்கு தாடி டிராகன் என பெயர் வந்தது. அதன் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு தாடியின் நிறம் மாறுகின்றன.
3. இவை பிறக்கும் போது நம் விரலின் நகம் அளவில் தான் இருக்குமாம்.
4. இவை நீச்சல் தெரிந்தவை. பார்வை மற்றும் செவி திறனில் வல்லமை படைத்தது.
5. மனிதர்களைப் போல அனைத்து நிறங்களையும் பார்க்க கூடியவை. தலைக்கு பின்னால் இருப்பதை பார்க்கக் கூடியது. இதற்கு காரணமாக இருப்பது அதன் தலையில் பின்னால் உள்ள கண் தான்.
6. கூட்டமாக வாழக் கூடியது. தாவரம் மற்றும் விலங்குகள் இரண்டையும் உண்ணும். பழங்களை விரும்பி உண்கின்றன.
7. ஊர்வன வகையில் நிறத்தை மாற்றிக் கொள்ள கூடிய விலங்குகளில் இது இரண்டாவது. குழந்தைகள் விளையாடக் கூடிய செல்லப்பிராணி இது.
8. ஒரு மணி நேரத்தில் 9 மைல் தூரம் ஓடக் கூடியது.
9. இதன் பற்கள் மீண்டும் மீண்டும் வளரக் கூடியவை. உணவுகளை கிழிக்கும் போது பற்கள் உடைந்தாலும் அவை மீண்டும் வளரக் கூடியது.
10. நின்று கொண்டே தூங்கக் கூடியது. உடம்பில் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும்.
11. பெண் தாடி டிராகன் விந்தணுக்களை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியது. பின்னர் தானே கருத்தரித்துக் கொள்கிறது.
12. தாடி டிராகன் யூரேட் என்ற பவுடர் போன்ற சிறுநீரை வெளியேற்றுகிறது. இது நீராக இல்லாமல் பவுடர் அல்லது பேஸ்ட் போல உள்ளன.
13. இது தன் உடலில் உள்ள நீரை உறிஞ்சி கொள்வதற்காக இவ்வாறு யூரேட்டை வெளியேற்றம் செய்கிறது.
14. குளிர்காலங்களில் இவை வெளியே வராமல் துயில் கொள்கின்றன. இதன் தொடக்க நிலை பசியின்மை, அதிக உறக்கம், உடலில் தட்பவெப்ப நிலை, இருதய துடிப்பு போன்றவை மிதமாக இருக்கும்.
15. மூன்று அறைகள் கொண்ட இருதயம் தாடி டிராகன்களுக்கு உள்ளது. இவை பத்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
16. ஹவாயில் தாடி டிராகன் வளர்ப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
17. முழுதாக வளர்ச்சி அடைந்த ஆண் தாடி டிராகன் 17 முதல் 24 அங்குலம் இருக்கும். பெண் தாடி டிராகன் 20 அங்குலம் இருக்கும்.
18. தாடி டிராகன் லேசான விஷத்தை உற்பத்தி செய்கிறது. இது தன் எதிரிகளை கொள்வதற்காக மட்டுமே மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
19. இவை சால்மோனெல்லா பாக்டீரியாக்களை சுமந்து செல்கிறது. மனிதர்களிடத்தில் பரவுகிறது.
20. தாடி டிராகனின் வால் பகுதி அதன் உடலின் பாதி நீளம் இருக்கும்.
தாடி டிராகன் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Bearded Dragons in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com