சூரிய மின்னாற்றல்: 20 Interesting Facts about Solar Energy in Tamil
சூரிய மின்னாற்றல் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
சூரிய மின்னாற்றல் (Solar Power) என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான சூரிய ஆற்றல் (CSP) முறையிலும் பெறப்படுகிறது. சூரிய மின்னாற்றல் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Solar Energy in Tamil
சூரிய மின்னாற்றல் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. 1954 ஆம் ஆண்டு பெல் (Bell) ஆய்வகம் முதல் சூரிய மின்கலத்தை (solar cell) உற்பத்தி செய்தது.அதன் பிறகு ஆற்றல் வளர்ச்சியில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது.
2. சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது.
3. ஒளிமின்னழுத்தி முறையில், ஒளிமின் விளைவைப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக மின்னோட்டமாக மாற்றப்படுகிறது.
4. நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை நூறு மெகா வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளவை.
5. சூரிய ஒளியானது பகல் நேரங்களில் கிடைப்பதனால், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின் ஆற்றலை மின்கலத்தில் சேமிப்பதன் மூலம் இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
6. 1,74,000 டெராவாட்ஸ் ஆற்றல் சூரியன் மூலமாக சூரிய கதிர்களாக பூமியை அடைகிறது.மழை நாட்களிலும் கூட.
7. ஒரு மணி நேர சூரிய ஒளியில் இருந்து நம் பூமிக்கு ஒரு வருடத்திற்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யலாம்.
8. 40 வருடங்களுக்கும் மேலாக சூரிய ஆலைகள் உறுதியாக இருக்கின்றன.
9. உலகிலேயே மிக பெரிய சூரிய மின் நிலையம் மொஜாவே(Mojave) பாலைவனத்தில் உள்ளது. இது 1000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
10. உலகின் மிக மலிவான ஆற்றல் ஆதாரம் சூரிய மின்னாற்றல் தான். புதைபடிவ எரிபொருள்களை விடவும் மலிவானது.
11. உலகிலேயே சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் தலைமையானது சீனா.
12. ஐக்கிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. அவைகளுள் கலிபோர்னியா அதிக ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
13. 2,60,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சூரிய ஆற்றல் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
14. சூரிய தகடுகள் ஒரு சதுர அடியில் 10கிலோவாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரத்தில் உற்பத்தி செய்கிறது.
15. 2 மில்லியன் சூரிய தகடுகள் ஐக்கிய நாடுகளில் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
16. மொத்த உலகிற்கும் சூரிய மின்னாற்றல் கொடுக்க தோராயமாக 1,91,000 சதுர மைல்கள் சூரிய தகடுகள் தேவைப்படுமாம்.
17. 30 வருடங்களில் சூரிய தகடு பூமியில் 100 டன் கார்பன் டை ஆக்சைடு மூலம் ஏற்படும் மாசுவை காட்டுபடுத்தி உள்ளது.
18. மிக சக்தி வாய்ந்த சூரிய தகடுகள் மோனோ கிரிஸ்டலின் சிலிக்கான் ஆல் ஆனது.
19. சூரிய தகடுகள் தன் மேல் விழும் சூரிய கதிர்களை 20% மின்சாரமாக மாற்றுகிறது.
20. நமது வீட்டின் மதிப்பு சூரிய தகடுகளால் உயருகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. உங்கள் வீட்டின் உண்மையான விலையில் 4.1% அதிகமாக இருக்குமாம்.
சூரிய மின்னாற்றல் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Solar Energy in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com