இதய நோய்: 20 Facts about Heart Disease in Tamil
இதய நோய் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்
கார்டியோ வாஸ்குலார் நோய் அல்லது இதய நோய் என்பது உலகெங்கும் ஏற்படும் உயிர் இறப்புகளுக்கு முன்னனி காரணமாக உள்ளது.இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ரத்த ஓட்டம் சீர்குலைவதால் இந்த இதய நோய் ஏற்படுகிறது. இதய நோய்களைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் புது புது ஆய்வுகளை மேற்கொண்டு பல சுவாரசியமான தகவல்களை நமக்கு அளித்துள்ளனர். இதய நோய் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்:
20 Interesting Facts about Heart Disease in Tamil
இதய நோய் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. உலகளாவிய பரவல்: உலக அளவில் இறப்பின் முன்னணி காரணமாக கருதப்படுவது இதய நோய் ஆகும்.உலக சுகாதார இயக்கம் (WHO- World Health Organization) கூறுவதன்படி ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் நபர்கள் இதய நோயினால் இறக்கின்றனர்.
2. பல்வேறு வகைகள்: இதய நோய்கள் பல வகைகளாக உள்ளன. அரித்மியாஸ், கரோனரி ஆர்டரி நோய், இதய செயலிழப்பு, வால்வுலார் இதய நோய் போன்றன உள்ளன.
3. பாலினங்களில் வேறுபாடு: பெண்களைவிட ஆண்களுக்கே இதய நோய் அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் இது ஆண்களுக்கு இளம் வயதிலே வருவதாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்கு (மெனோபாஸ்) பிறகே இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
4. சைலண்ட் கில்லர்: இதய நோய்கள் பெரும்பாலும் எந்த வித அறிகுறிகளும் இல்லாமலே வருகின்றன. அதனால் தான் இது சைலண்ட் கில்லர் (அமைதியான கொலையாளி) என்று அழைக்கப்படுகிறது. தொடர் மருத்துவ பரிசோதனை மட்டுமே இதனை கண்டுபிடிக்கத் தீர்வாகும்.
5. கொலஸ்டிரால் பினைப்பு: அதிக அளவில் காணப்படும் குறையடர்த்தி கொழுமியப்புரதம் (low density lipoprotein LDL) பெருந்தமனி தடிப்பை உண்டாக்குகிறது. இது இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும்.
6. உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு: கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகள் ஆகும்.
7. சோம்பலான வாழ்க்கை முறை: உடல் செயல்பாடு குறைவாக இருக்கும் ஆட்களுக்கு எளிதில் இதய நோய் ஏற்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.
8. நீரிழிவு நோயின் தொடர்பு: நீரிழிவு நோய் உடையவர்கள் இதய நோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு கொண்டுள்ளனர்.
9. மன அழுத்தம் மற்றும் இதய நோய்: நாள்பட்ட மன அழுத்தம் நம் இதயத்தில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதர இதய நோய்கள் ஏற்படுகின்றன.
10. மாரடைப்பு அறிகுறிகள்: நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், குமட்டல், கை (தோள்பட்டை), கழுத்து மற்றும் தாடையில் வலி போன்றன மாரடைப்பின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
11. இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள்: நாம் உட்கொள்ளும் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் இருக்க வேண்டும். இவ்வாறான உணவுகள் இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும்.
12. தீங்கு தரும் புகைப்பழக்கம்: புகைபிடித்தல் நமது ரத்த குழாய்களை சேதமடையச் செய்கின்றன. மேலும் இது இதய நோயை உண்டாக்கும் காரணியாகும். புகை பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் நமது இதயத்தை காக்கலாம்.
13. குடும்ப வரலாறு: குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதய நோய் இருந்தால் அதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
14. மது பழக்கம்: அதிகளவில் மது அருந்துதல் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மேலும் மது அருந்துதல் இதய நோய் ஏற்படுத்துவதற்கான காரணிகளுள் ஒன்றாகும். மிதமான அளவு தீர்வு தரும்.
15. காற்று மாசுபாடு மற்றும் இதய நோய்: மாசு படிந்த காற்றை சுவாசிப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியன ஏற்படுகின்றன.
16. தூக்கத்தில் மூச்சுத்திணறல்: குணப்படுத்தாத தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
17. குழந்தைகளுக்கு இதய நோய்: பிறவிக் குறைபாடுகளில் மிகவும் பொதுவானது எனக் கருதப்படுவது பிறவியிலேயே இதய நோயுடன் பிறப்பதாகும். இது பிறந்த குழந்தைகளை ஒரு சதவீதம் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
18. நவீன சிகிச்சை: மருத்துவத் துறை தற்போது பெருமளவில் வளர்ந்து உள்ளது. குறைந்தபட்ச ஊடுருவும் இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சுலபமானது ஆகும்.
19. இதயம் மற்றும் மூளை : மறதி நோய் மற்றும் இதய நோய்களுக்கு இடையே பெரிய தொடர்பு உள்ளது. இதய நோயின் காரணிகளுள் மூளை குறைபாட்டின் பங்கு தொடர்பு கொண்டுள்ளது.
20. வாழ்க்கை முறையும் தடுப்பு முறையும்: பல விதமான இதய நோய்கள் தடுக்கக் கூடியவை. மேலும் இவை சீரான வாழ்க்கை முறையினால் கட்டுப்படுத்தக் கூடியது. முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு பழக்கம் மற்றும் அமைதியான சூழல் மூலம் இதய நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
இதய நோய் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Heart Disease in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com