மாரடைப்பு: 15 Interesting Facts about Heart Attack in Tamil
மாரடைப்பு பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்து விடுகிறார்கள் என்பது சாதாரண செய்தி ஆகிவிட்டது. மாரடைப்பை பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
15 Interesting Facts about Heart Attack in Tamil
மாரடைப்பு பற்றி 15 சுவாரஸ்யமான உண்மைகள்
1. இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் தமணிகளில் ஏற்படும் அடைப்பால் தான் மாரடைப்பு நிகழ்கின்றன.
2. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஏதோ ஒருவருக்கு மாரடைப்பு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. ஒவ்வொரு ஆண்டும் 8,05,000 மக்கள் மாரடைப்பால் ஐக்கிய நாடுகளில் பாதிக்கின்றனர்.
4. இதில் 6,05,000 மக்கள் முதல் அட்டாக்கினால் (மாரடைப்பு) பாதிக்கப்படுகின்றனர். 2 லட்சம் மக்கள் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள் ஆவார்கள்.
5. ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு தங்களுக்கு மாரடைப்பு வருகிறது என்ற விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர்.
6. எல்லா நேரங்களிலும் மாரடைப்பு அறிகுறிகளுடன் வருவதில்லை. சிலருக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமலே ஏற்படுகின்றன. இது சைலண்ட் அட்டாக் எனப்படுகிறது. இது பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் 75 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்படும்.
7. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் வித்தியாசமானதாக உள்ளது. செறிமானக் கோளாறுகள், பசியிண்மை, தோள்பட்டை வலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. 25 சதவீத பெண்களுக்கு அறிகுறிகள் இன்றி மாரடைப்பு ஏற்படுகின்றன.
8. எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும்.
9. சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது ஆகும். சிரிப்பதனால் நமது ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டத்தை 20 சதவீதம் அதிகரிக்கிறது.
10. இரண்டாவது முறை மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் அஸ்பிரின் டோஸேஜ் எடுத்துக் கொள்ளலாம்.
11. தினமும் டயட் சோடா அருந்துவது மாரடைப்பை ஊக்கப்படுத்துகிறது.
12. ஆண்களை விட 50% பெண்களுக்கு தான் மாரடைப்பால் மரணம் ஏற்படுவது அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
13. புகையிலை பிடிப்பதும், மது அருந்துவதும் கூட மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களுல் ஒன்றாகும்.
14. 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்களுள் முதல் அட்டாக் ஏற்பட்டவர்கள் எனின் அவர்களுக்கு 5 ஆண்டுகளில் இரண்டாவது அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
15. ஆச்சரியமூட்டும் உண்மை என்னவென்றால் அதிக மாரடைப்புகள் திங்கட்கிழமைகளில் தான் நிகழ்கிறது. வார இறுதி முடிந்து வாரம் ஆரம்பிக்கும் தருணத்தில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பு பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Heart Attacks in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com