நோய் எதிர்ப்பு சக்தி: 20 Interesting Facts about Immune System in Tamil
நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நோய் எதிர்ப்பு சக்தி (Immune System) என்பது நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த பொறிமுறைகளின் தொகுதி ஆகும். இத்தொகுதி, வைரசுகள் முதல் ஒட்டுண்ணிப் புழுக்கள் வரையிலான நோய்க்காரணிகளைக் கண்டுபிடிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தி பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Immune System in Tamil
நோய் எதிர்ப்பு சக்தி பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் நம் உடல் நோய்வாய்ப்பட்டு பல உடல் உறுப்புகள் அழிந்து விடும்.
2. நமது உடல் ஒவ்வொரு முறை நுண்ணுயிர்களை அழிந்த பிறகும் அதை ஞாபகம் வைத்துக் கொள்ளும். மறுமுறை அந்த வைரஸோ அல்லது பாக்டீரியாக்களோ வரும்போது உடனே அழித்து விடும்.
3. நம் உடலில் இரண்டு வகையான நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளன. ஒன்று நாம் பிறக்கும் போதே நம்முடன் இருப்பது மற்றொன்று நோய் ஏற்பட்டு அந்த நுண்ணுயிர்களை தாக்கிய பின்பு அதனால் ஏற்படுவது.
4. நமக்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்றால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்கிறது என்று பொருள். ஏதோ ஒரு நுண்ணுயிரியிடம் இருந்து நம் உடலை பாதுகாப்பதற்காக சண்டை போடுகிறது என்று அர்த்தம்.
5. நோய் எதிர்ப்பு சக்தி ஒன்பது இதயம் மூளை என்று குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அமைத்திருக்காது. உடலில் அனைத்து இடங்களிலும் இருக்கும்.
6. அலர்ஜி, ஆஸ்துமா, தோல் நோய் போன்றவைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நோய் எதிர்ப்பு சக்தி தான்.
7. நமக்கு வயதான பிறகு நமது உடலில் உள்ள திசுக்கள் சுருங்கிவிடும். அதனால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது.
8. கி.மு. 430 ஆம் ஆண்டில் பிளேக் நோய் பரவியபோது ஒரு உண்மை கண்டறியப்பட்டது. அது என்னவென்றால் ஏற்கனவே சின்ன அம்மை ஏற்பட்டவர்களுக்கு இரண்டாவது முறை வருவதில்லை என்பதே ஆகும்.
9. முதன் முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது 18 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் தான்.
10. அப்பன்டிஸ் என்பது நமது உடலில் தேவையற்ற உறுப்பாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அது நோய் எதிர்ப்பு சக்திக்கான இடம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.
11. மரபியல் நோயான SCID என்பது பிறப்பிலே நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதன் செல்கள் இல்லாமல் இருப்பது ஆகும்.
12. நோய் எதிர்ப்பு சக்தியானது தூக்கமின்மையால் தன் செயல்பாடுகளில் குறைவு ஏற்படுகிறது. சரியான தூக்கம் இல்லாதபோது T செல்களின் உற்பத்தி குறைகிறது. T செல்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கக் கூடியது.
13. நமது நோய் எதிர்ப்பு சக்தி பல விதமான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. B (பீட்டா) செல்கள் இந்த செயலை செய்கிறது. Y வடிவத்தை கொண்டது இந்த செல்கள்.
14. சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலிலேயே பாதிப்பு ஏற்படுத்துகிறது. தேவையற்ற செல்கள் உற்பத்தி ஆவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியின் முதல் பிரதிபலிப்பு வீக்கம் தான்.
15. இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இந்த நோய் எதிர்ப்பு செல்கள் நமது கணையத்தில் ஐலட் செல்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
16. மன அழுத்தம் நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கிறது. மன சோர்வு கார்டிஸோல் போன்ற ஸ்டீராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அது நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாடுகளை குறைக்கிறது.
17. அதே சமயம் நல்ல எண்ணங்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் லிம்போசைட்களின் பெருக்கம் அதிகமாகிறது.
18. மிகவும் தூய்மையான சுற்றுச்சூழல் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை ஆகும். ஏனெனில் மிக்க தூய்மையான சுற்றுச்சூழல் என்றால் அங்கு நுண்ணியிரிகள் இருகாது மனித உடலை அண்டாது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல் இழக்கிறது.
19. பாகோஸைட் என்பது ஒரு வகையான நோய் எதிர்ப்பு செல் ஆகும். இது உணவு மூலம் நம் உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை முழுதாக விழுங்கி விடுகிறது. அதன் வடிவம் சூடோபோடியா என்று அழைக்கப்படுகிறது.
20. 80 சதவீத நோய் எதிர்ப்பு செல்கள் குடலில் தான் உள்ளது. மைக்ரோபயோட்டா என்பது குடலில் உள்ள செல் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Immune System in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com