ஈமோஃபீலியா: 15 Interesting Facts about Hemophilia in Tamil
ஈமோஃபீலியா [Hemophilia] பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஈமோஃபீலியா (Haemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று. ஹீமோபிலியா பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
15 Interesting Facts about Hemophilia in Tamil
ஈமோஃபீலியா பற்றி 15 சுவாரஸ்யமான உண்மைகள்
1. மரபணு குறைபாடுகளின் காரணமாக அல்லது தன்னுடல் தாக்குநோய் (Autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந்நோய் உண்டாகிறது.
2. ஈமோஃபீலியா A,B,C என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
3. இந்நோயைப் பற்றி குறிப்பிட்ட மருத்துவ வல்லுநர் அபுல்காசிஸ் என்பவர் ஆவார்.
4. பத்தாம் நூற்றாண்டில் இவர் சில லேசான காயங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கின் காரணமாக ஆண்களை இழந்த குடும்பங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
5. இந்த நோயைப் பற்றிய பல விளக்கவுரைகள் மற்றும் நடைமுறைக் குறிப்புகள் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றிலும் காணப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் அறிவியல் ரீதியான பகுப்பாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
6. நீரிழிவு நோய் போன்றே இதற்கும் முழுமையாக சரியாவதற்கான வழிமுறைகள் இல்லை. ஆனால் நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
7. ஈமோஃபீலியா C மற்ற வகைகளோடு ஒப்பிடுகையில் குறைந்த ஆபத்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
8. ஹீமோபிலியா A மற்றும் B வகைகள் X குரோமோசோமில் நிகழ்வதால் பெண்களை விட ஆண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
9. பெண்கள் இந்த நோயை ஏந்தி செல்லக்கூடிய கேரியர் ஆகின்றனர்.
10. 5000 ஆண்களில் ஒரு நபருக்கு ஈமோஃபீலியா A ஏற்படுகிறது.
11. மற்ற நபர்களுடன் ஒப்பிடுகையில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு ஆயுட்காலம் குறைவானது என கூறப்படுகிறது.
12. 25,000 ஆண்களில் ஒரு நபருக்கு ஈமோஃபீலியா B தாக்கம் ஏற்படுத்துகிறது.
13. 1,00,000 ஆண்களில் ஒரு நபருக்கு தான் மூன்றாம் வகை ஈமோஃபீலியா C தாக்குகிறது. இது ஆண்களையும் பெண்களையும் சமமாக தான் பாதிக்கிறது.
14. ஈமோஃபீலியாவின் பாதிப்புகளாக கூறப்படுபவை மூட்டு வலி, இரத்தக் கசிவு, இதய நோய், ஆர்திரிட்டிஸ், சிறுநீரகக் கோளாறு போன்றவைகள் ஆகும்.
15. ஹீமோபிலியாவை கண்டறிவதற்கு மருத்துவர்கள் இரத்த பரிசோதனை செய்கின்றனர். இரத்தத்தின் உறையும் திறனை ஆராய்ந்து இந்நோயை கண்டறிகின்றனர்.
ஹீமோபிலியா பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Hemophilia in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com