ஆஸ்துமா: 20 Interesting Facts about Asthma in Tamil
ஆஸ்துமா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஆஸ்துமா என்பது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு ஏற்படுத்தும் நாள்பட்ட வியாதி ஆகும். இது சுவாச மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் வருகிறது. இது பரவக்கூடிய நோய் அல்ல. ஆஸ்துமா பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Asthma in Tamil
ஆஸ்துமா பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நுரையீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஒடுக்கம் காரணமாக இந்த ஆஸ்துமா ஏற்படுகிறது.
2. இதன் விளைவாக இருமல், வீசிங், மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கம் ஆகியன ஏற்படுகிறது.
3. 2019 ஆண்டு கணக்கெடுப்பின்படி 262 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். 4,55,000 மக்கள் ஆஸ்துமாவால் மரணம் அடைந்துள்ளனர்.
4. ஆஸ்துமா நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, இழைப்பு நோய், மூச்சுத் தடை நோய், மூச்சு பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
5. குழந்தைகளில் வரும் நாட்பட்ட நோய்களில் மிக அதிகளவில் இருப்பது ஆஸ்துமா தான் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
6. இந்நோய் உள்ளவர்களில் 80% மாணவர்கள் குறைவான அல்லது நடுத்தரமான வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
7. ஐக்கிய நாடுகளில் அமெரிக்காவின் மக்கள் தொகையில் 7 சதவீதம் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8. அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 4000 மக்கள் இறப்பிற்குக் காரணம் ஆஸ்துமா என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூப்பித்துள்ளனர்.
9. 2025 ஆம் ஆண்டு உலகளவில் 100 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
10. குழந்தைகளில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தைகளுக்கே ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
11. முதியவர்களில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.
12. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்ற இனத்தவரைவிட 2 முதல் 3 மடங்கு அதிகம் ஆஸ்துமாவால் மரணம் அடைகின்றனர்.
13. வெள்ளை இனத்தவரை விட கருப்பு தோல் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மூன்று சதவீதம் அதிகம் இந்நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
14. பெண்களில் 9.8% பேர் ஆஸ்துமா உள்ளவர்கள். ஆண்களில் 6.1% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15. 2008 – 2013 கணக்கீட்டின்படி 3 பில்லியன் டாலர் ஆஸ்துமாவால் பள்ளி மற்றும் கல்லூரி வேலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
16. நகரமயமாக்கல் ஆஸ்துமாவிற்கான ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மாசு புகை போன்றவற்றாலும் இவை ஏற்படுகின்றன.
17. அதிக பருமன் கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
18. பதற்றம், கவலை, மன அழுத்தம் போன்ற மனதளவில் ஏற்படும் உணர்ச்சிகள் ஆஸ்துமாவை அதிகப்படுத்தும்.
19. 50.3 பில்லியன் டாலர் ஆஸ்துமா நோயின் மருத்துவச் செலவுகளுக்காக செலவிடப் பட்டுள்ளது.
20. 29 பில்லியன் டாலர் ஆஸ்துமா நோயினால் இறந்தவர்களுக்காக இழக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Asthma in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com