நீர் மாசுபாடு: 20 Interesting Facts About Water Pollution in Tamil
நீர் மாசுபாடு பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு (Water Pollution) என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந்த நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீர் மாசுபாடு பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts About Water Pollution in Tamil
நீர் மாசடைதல் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. மூன்றில் ஒரு பங்கு நபர்கள் குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் மாசுபட்ட நீரைத்தான் குடிக்கிறார்கள்.
2. நமது பூமியானது 70 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. எனினும் அதில் 2.5% தான் தூய நீர் உள்ளது.
3. 70 சதவீதம் தொழிற்சாலைக் கழிவுகள் நீரில் மூழ்கப்படுகிறது. 80 சதவீத நீர் மாசுபாடு உள்நாட்டு கழிவுகளால் ஏற்படுகிறது.
4. ஒவ்வொரு வருடமும் 2,97,500 குழந்தைகள் மாசுபாடான நீரால் உயிர் இழக்கினீறனர்.
5. கொடூரமான போர்கள் மூலம் இறப்போரின் எண்ணிக்கையை விட தூய்மை அற்ற நீரால் இறப்போரே அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
6. முறையான வெளியேற்றம் செய்யப்படாத குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் நீரில் கலப்பதால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
7. இதனால் 1.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 5,02,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர்.
8. 2.6 மில்லியன் மக்கள் 1990 களுக்கு பின் தூய்மையான குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
9. 2050 ஆம் ஆண்டு களில் உலக மக்கள் தொகையில் 52 சதவீத மக்கள் நீர் குறைந்து காணப்படும் இடங்களில் தண்ணீர் கட்டுப்பாட்டுடன் வாழக்கூடும்.
10. ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க போன்ற வளரும் நாடுகளில் வளர்ந்து வரும் மக்கள் தொகையால் பிற்காலத்தில் தண்ணீர் பிரச்சினை வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
11. உலகின் மொத்த கழிவு நீரிலும் 80 சதவீத கழிவுநீர் முறையாக அகற்றப் படாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதனால் தேசத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
12. ஒவ்வொரு நாளும் 2 மில்லியன் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் நீரில் கலக்கின்றது.
13. அமெரிக்காவில் 10 சதவீத கடற்கரைகள் நீச்சல் செய்வதற்கு பாதுகாப்பானது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
14. உலகில் மொத்தம் 700 இறந்த மண்டலங்கள் (Dead Zone) உள்ளன. அதில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாது. இந்த அளவு ரஷ்யாவின் பரப்பளவிற்கு சமமானது ஆகும்.
15. கடல் மாசுபாட்டிற்கு எட்டு சதவீதம் காரணமாக இருப்பது கெமிக்கல் ரசாயனங்கள், மற்றும் அதிக கணம் கொண்ட உலோகங்கள் தான்.
16. மீத்தேன் வாயு உருவாவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதில் நீர் மாசுபாடு பெரும் பங்கு வகிக்கிறது. கார்பன்டை ஆக்சைடு விட 84 மடங்கு நச்சுத்தன்மை கொண்டது இந்த மீத்தேன் வாயு. சுற்றுச்சூழலை அதிக வெப்பம் ஆக்குகிறது. இதனால் பூமியில் வறட்சி ஏற்படுகிறது.
17. ஐக்கிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் 34 பில்லியன் கலூன் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர்கள் பல நவீன முறைகளால் சுத்தம் செய்யப்படுகிறது.
18. மற்ற கண்டங்களை விட ஆசியா கண்டத்தில் தான் அதிக மாசு நிறைந்த ஆறுகள் உள்ளன என கூறப்படுகிறது. அதில் மனித கழிவுகளால் உருவாகக் கூடிய பாக்டீரியாக்கள் தான் அதிகம் உள்ளன.
19. இந்தியாவில் உள்ள கங்கை நதி தான் உலகிலேயே அதிக மாசு படிந்த ஆறாகக் கருதப்படுகிறது. அதில் அதிக குப்பைகள், கழிவுகள், இறந்த விலங்குகள் மற்றும் இறந்த மனிதர்களின் சடலங்கள் கிடக்கின்றன.
20. சீனாவில் 20 சதவீத நிலத்தடி நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை கார்சினோஜென் என்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருளால் நிறைந்துள்ளது.
நீர் மாசுபாடு பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Water Pollution in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com