பற்கள்: 20 Interesting Facts about Teeth in Tamil
பற்கள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
பற்களும், எலும்பும் கால்சியத்தால் ஆனவை. ஆனால் இரண்டிலும் நரம்புகளும், ரத்தக் குழாய்களும் இருக்கின்றன. எலும்புகளால் எலும்பு மஜ்ஜை உருவாக்கப்படுகிறது. பற்களால் மஜ்ஜை உருவாக்க முடிவதில்லை. எனவே பற்களை எலும்பாகக் கருத முடியாது. பற்கள் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Teeth in Tamil
பல் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. உடலில் காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இருக்கும் திசுக்கள், தானாகவே சரியாகிவிடும். ஆனால் பற்கள் மட்டும் தான் உடைந்தால், அவ்வாறு பழைய நிலையை அடைவதில்லை.
2. முதல் நிலை பற்கள் 20 பற்கள் ஆகும் (குழந்தை பருவம்) இரண்டாம் நிலை பற்கள் 32 பற்கள் ஆகும்.
3. குழந்தைகளின் பல் வளர்ச்சி கருவிலேயே உருவாகிறது. ஆனால் வெளியில் முளைத்து வருவதில்லை. 6 முதல் 12 மாதங்களில் தான் அவை வெளியே வருகின்றன.
4. பற்களின் மேல் உள்ள எனாமல் தான் உடலிலேயே அதிக கடினமானது. எலும்புகளை விடவும் கடினமானது இவைகள் தான்.
5. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 38 நாட்களை பல் துலக்குவதற்காக செலவிடுகிறான்.
6. மூன்றில் ஒரு பங்கு பற்கள் நம் பற்களின் ஈர்களுக்கு உள்ளேயே இருக்கின்றன.
7. மனிதர்களுக்கு மட்டுமே 32 பற்கள் உள்ளன. சுறாக்களுக்கு 40 பற்கள் உள்ளன. குதிரைக்கு 44, டால்பின்களுக்கு 250 பற்கள் உள்ளன.
8. கடந்த நூறு ஆண்டுகளாக தான் பற்பசை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன்னர் மக்கள் சிப்பி ஓட்டை அரைத்தும், சுண்ணாம்பு, செங்கல், எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றை உபயோகித்தனர்.
9. பற்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கைரேகையை போல பற்களும் ஒவ்வொறு மனிதர்க்கும் தனித்துவமானது ஆகும்.
10. சில குழந்தைகள் பிறக்கும் போதே பற்களுடன் பிறக்கின்றனர். 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறு பல்லுடன் பிறக்கின்றனர்.
11. உலகின் மனித பற்களில் நீளமான பல்லாக கருதப்பட்டது சிங்கப்பூரில் இருந்த மனிதர் தான். இது 2009 ஆம் ஆண்டு பிரித்தெடுக்கப்பட்டது. இதன் நீளம் 3.2 செ.மீ ஆகும்.
12. மனிதன் தன் வாழ்நாளில் 25,000 குவார்ட் சலைவா(உமிழ்நீர்) உற்பத்தி செய்கிறான். இரண்டு நீச்சல் குளங்களை இதனால் நிரப்ப முடியுமாம். உமிழ்நீர் பற்களை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கின்றன.
13. மனித உடலில் பல நோய்கள் பற்களுடன் சம்பந்தப்பட்டவை. நீரிழிவு நோய், ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் இதய நோய்கள் பற்களுடன் சம்பந்தப்பட்டவை.
14. மனித பற்களின் கடிக்கும் திறன் 200 Lb ஆற்றல் கொண்டது ஆகும்.
15. நமது பற்கள் வெண்மையாக இருப்பதற்கான காரணம் பற்களின் மேல் உள்ள எனாமல் தான். இவை சிதைவு அடையும்போது பற்கள் மஞ்சளாக மாறுகின்றன.
16. நமது பற்களின் எனாமலில் உள்ள பிளேக் கில் 300 க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளது.
17. உலகில் முதன் முதலில் பற்பசை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1908 ஆகும். பல்துலக்கி (டூத் பிரஷ்) 1938 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
18. 1948 ஆம் ஆண்டுகளில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட டூத் பிரஷ்கள் குதிரை, பன்றி போன்றவைகளின் முடியில் இருந்து உருவாக்கப்பட்டன.
19. நத்தையின் வடிவம் சிறியது தான் ஆனால் அதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பற்கள் உள்ளன. ஏறத்தாழ 25,000 பற்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
20. அமெரிக்கர்கள் வருடங்களுக்கு 2 பில்லியன் டாலர் தங்கள் பற்களின் பராமரிப்பிற்காக செலவழிக்கப் படுகிறது.
பற்கள் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Teeth in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com