வைரம்: 20 Interesting Facts about Diamonds in Tamil
வைரம் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள்
வைரம் (Diamond) என்பது படிம நிலையில் உள்ள ஒரு கரிமம் ஆகும். பட்டைத் தீட்டிய வைரம் ஒளியை அழகோங்கச் சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். வைரம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Diamond in Tamil
வைரத்தைப் பற்றி 20 சுவாரஸ்யமான தகவல்கள்
1. வைரங்கள் மிகவும் பழமையானது. நமது பூமியைப் போலவே இவை உருவாவதற்கு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலே ஆகின்றன.
2. பண்டைய காலத்தில் ரோமர்கள் மற்றும் கிரீஸ் நாட்டினர் வைரத்தை கடவுளின் கண்ணீர் துளியாகவும் நட்சத்திரங்களின் துகள்களாகவும் கருதினார்கள். வைரத்தினைப் பற்றிய சரியான விளக்கம் தெரியாமல் இருந்தனர்.
3. பழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்து தான் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது.
4. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கு அருகிலுள்ள சாம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்கள் இல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன.
5. வைரங்கள் பண்டைய இந்தியாவில் மதச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது; பின்னர் அவை ராசிக்கல்லாகக் கருதப்பட்டு வருகின்றன. வேலைப்பாட்டுக் கருவிகளில் அவற்றின் பயன்பாடு ஆரம்பகால மனித வரலாற்றில் இருந்தே இருக்கிறது.
6. 1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைரக் கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழச் செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதைக் காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார்.
7. பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார்.
8. வைரங்கள் 100 சதவீதம் கார்பன் அணுக்களால் ஆனது.
9. வைரம் (Diamond) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் “adamas” இருந்து வந்தது. அதற்கு பொருள் உடைக்க முடியாதது அல்லது அழிவற்றது என்பது ஆகும்.
10. எல்லா வைரங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும் தனித்துவமானது. மனித டிஎன்ஏ போல ஆகும்.
11. பூமியில் உள்ள இயற்கையான மிகவும் கடினமான பொருள் வைரம் தான். மோசின் திண்மை அளவு கோளில் வைரம் பத்தாவது இடத்தில் உள்ளது.
12. வைரங்களை வெட்ட வைரங்களால் மட்டுமே முடியும். கூர்மையான வைரத் துண்டுகளை கொண்டு தான் வைரங்களை வெட்டி வடிவமைக்கின்றனர்.
13. வைரம் வெள்ளை நிறம் என்று பலரும் எண்ணி வருகின்றோம். ஆனால் உண்மையில் வைரம் வெள்ளை நிறமில்லை அவை வெளிர் மஞ்சள் அல்லது நிறமில்லாமலோ தான் இருக்கின்றன. அவை ஊதா, பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன.
14. பல நட்சத்திரங்களில் வைர கோர் இருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறப்படுகிறது.
15. உலகின் மிகப்பெரிய வைரம் என்று அறியப்பட்டது 2.27 ஆயிரம் டிரில்லியன் டன்கள் எடை கொண்டதாகும் அல்லது 10 பில்லியன் டிரில்லியன் கேரட் ஆகும். இந்த எடையானது 179 டிரில்லியன் இரட்டை அடுக்கு பேருந்தின் எடைக்கு சமமானது ஆகும்.
16. வெள்ளியின் வளிமண்டலத்தை முதன் முதலில் கண்டுபிடிக்க உதவியது வைரம் தான் என்கின்றனர். ஏனெனில் வைரத்திற்கு மட்டுமே வளிமண்டலத்தில் உள்ள அழுத்தத்தை கண்டுபிடிக்கக் கூடிய வலிமை உள்ளது.
17. பண்டைய காலத்தில் இந்துக்கள் வைரங்களை தெய்வச் சிலையின் கண்களில் பொருத்தியுள்ளனர். இதனால் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் அகன்று போவதாக நம்பினார்கள்.
18. மேலும் அவர்கள் வைரம் அணிவதால் வலிமை மற்றும் சக்தி கிடைப்பதாக நம்பினார்கள். அதனால் ஆண்கள் போருக்கு செல்லும் முன் வைரக் கற்களை அணிந்து கொண்டு சென்றனர்.
19. பூமியின் 250 டன் பகுதி இடங்கள் ஒரு கேரட் வைரத்தை எடுப்பதற்காக வெட்டப்படுகிறது.
20. 80 சதவீத வைரங்கள் தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.
வைரம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Diamonds. We hope today you know something useful!
Images Credit: pixabay.com