துத்தநாகம் [ஜிங்க்]: 20 Interesting Facts about Zinc in Tamil
துத்தநாகம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
துத்தநாகம் [Zinc] என்பது நீலம் கலந்த வெண்ணிறமுடைய வேதி உலோகம் ஆகும். இது உலோகம் மட்டுமல்ல நமது உடலில் பெருமளவில் தேவைப்படின் கூடிய சத்துக்களில் இதுவும் ஒன்று. இதன் வேதிக்குறியீடு Zn. இதன் அணு எண் 30. இதன் அணு நிறை 65.37, அடர்த்தி 7140 கிலோ கலோரி ஆகும். துத்தநாகம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Zinc in Tamil
துத்தநாகம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. உலகம் முழுவதும் 1.9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் [ஜிங்க்] காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
2. ஆசியா, ஆத்திரேலியா மற்றும் ஐக்கிய நாடான அமெரிக்கா முதலிய நாடுகளில் இது அதிகம் கிடைக்கிறது.
3. புவியில் இதன் செறிவு 0.0075% ஆகும். புவி மேலோட்டில் கிடைக்கும் கனிமங்களில் இது 24 ஆவது இடத்தில் உள்ளது.
4. இது பூஞ்சைகளைக் கொல்ல வல்லது. வேதியியல் ஆய்வகங்களில் வேதி வினைகளை செயல்முறை செய்து காட்ட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
5. இது கண் நோய்களுக்குப் பழங்காலத்திலிருந்தே ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
6. துத்தநாகம் (Zinc) என்ற பெயர் ஜெர்மன் மொழியில் இருந்து வந்தது. “zinke” என்ற வார்த்தைக்கு (pointed) என்று பொருள் ஆகும்.
7. இரும்பு, அலுமினியம் [Aluminum] மற்றும் செம்பு-க்கு அடுத்த வரிசையில் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் துத்தநாகம் ஆகும்.
8. துத்தநாகம் அதன் ஆக்ஸைடு மற்றும் அதன் கலவைகள் ஆகியன பேட்டரிகள், சன்ஸ்கீரின் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
9. உடல் நலத்திற்கு துத்தநாகம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இரும்புச் சத்திற்கு அடுத்ததாக உடம்பில் அதிகம் தேவைப்படக் கூடிய சத்து துத்தநாகம் தான்.
10. நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டவும், வெள்ளை அணுக்களின் வளர்ச்சிக்கு கரு வளர்ச்சிக்கு மற்றும் செல்களின் பிரிவுகளுக்கும் துத்தநாகம் செயல்படுகிறது.
11. சராசரி மனிதனின் உடலில் 1.5 லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகின்றது. இதில் 20% தோலில் படிந்திருக்கின்றது. எலும்பும், பல்லும் குறிப்பிட்ட அளவு துத்தநாகத்தைப் பெற்றிருக்கின்றன.
12. உடலில் ஏற்பாடும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதில் துத்தநாகத்திற்குப் பங்குள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். துத்தநாக சல்பேட் குடல் புண்களை ஆற்றுகின்றது.
13. வளரும் நாடுகளில் உள்ள ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் துத்தநாகக் குறைபாட்டு நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.
14. இக்குறைபாட்டால் ஏற்படும் நோயினால் வயிற்றுப் போக்கு அதிகரித்து உலகம் முழுவதும் சுமார் 800,000 குழந்தைகள் இறந்துள்ளனர்.
15. தங்கம் [Gold] போன்று தோற்றம் தருகின்ற போலி நகைகளைச் செய்வதற்கு பிரஞ்சுத் தங்கம் பயன்படுகின்றது. இதில் 90:10 என்ற விகிதத்தில் செம்பும், துத்தநாகமும் சேர்ந்திருக்கின்றது. இது செம்பைவிடக் கடினத் தன்மை மிக்கது.
16. சிலைகள் செதுக்க ஆணி, திருகு, மரைகள், பட்டறைக் கருவிகள், கைப்பிடிகள், பெயர்ப் பலகைகள், நகைகள் போன்றவை செய்ய இது பயன்படுகின்றது.
17. கப்பல்களில் மரத்துண்டுகள் உப்பு நீரால் அரிக்கப்பட்டு சிதைந்து போய்விடாமல் இருக்கப் பயன்படுத்தும் செம்புத் தகடுகளுக்குத் துத்தநாகப் பூச்சிட்டால் செம்புத் தகடுகள் கடலுப்பின் அரிப்பிலிருந்து தடுக்கப்படுகின்றது.
18. ஜிங்க் ஆக்சைடானது நிலைமின் நகலியில் (Xerox) உணர்தாளில் பயன்படுகின்றது. இது வர்ணங்கள், ரப்பர் பொருட்கள், அச்சிட உதவும் மைகள், சோப்புகள், சேம மின்கலங்கள், நெசவுத் துணிகள், மின்னியல் சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்களில் பயன் தருகின்றது.
19. துத்தநாக சல்பைடு ஒரு நிறமியாகப் பயன்படுகின்றது. இது அணு ஆய்வுக் கருவிகளில் ஒளிர்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. கதிர்வீச்சு இதில் விழும் போது உடனொளிர்வும் (Fluorescence) நின்றொளிர்வும் (Phosphorescence) ஏற்படுவதால் கதிர்வீச்சின் தன்மையை ஆராய முடிகின்றது.
20. இன்சுலின் மூலக்கூறுகளுக்கு துத்தநாகம் இன்றியமையாத கட்டமைப்புக் கூறாக உள்ளது. வைட்டமின் A இன் வளர்சிதை மாற்றத்தில் துத்தநாகம் தொடர்புடையதாக இருக்கின்றது.
துத்தநாகம் [ஜிங்க்] பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Zinc in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Zinc