புற்றுநோய்: 20 Interesting Facts about Cancer Disease in Tamil
புற்றுநோய் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
புற்றுநோய் (கேன்சர்) இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாகும். தொற்று இல்லா நோய்களில் இதுவே அதிகமாக உயிர்களைக் காவு வாங்கும் நோயாகும். புற்றுநோய் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Cancer in Tamil
கேன்சர் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. உடலுக்கு தேவையற்ற புதிய உயிரணுக்கள் தோன்றி பழைய உயிரணுக்கள் இறக்காமல் உடலிலேயே தங்கி விடும். இவை நாளடைவில் கழலை அல்லது கட்டி போன்று உருவாகின்றன. இதுவே புற்றுநோய் கட்டிகளாக உருவாகின்றன.
2. கேன்சர் (Cancer) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது அதற்கு பொருள் நண்டு என்பதாகும். ஏனெனில் உயிரணுக்களின் படர்ந்து விரிந்த தோற்றம் நண்டு போல இருப்பதால் இந்த பெயர் வந்தது.
3. அமெரிக்க புற்றுநோய் சமூகம் எடுத்த சர்வே ஒன்றில் 28 மில்லியன் புற்றுநோயாளிகள் உலகெங்கும் வசிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
4. புற்றுநோய் மனிதர்கள் இறப்பிற்குப் காரணமாக உள்ள நோய்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
5. ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.
6. 70% புற்றுநோய் இறப்புகள் குறைவான அல்லது நடுத்தரமுன வருமானம் கொண்ட நாடுகளில் காணப்படுகிறது.
7. மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் இறப்புகள் தொடர் சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம் தடுக்கலாம்.
8. 1.16 டிரில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் கான பொருளாதார செலவு ஆகும்.
9. பழங்கால எகிப்தியர்கள் தான் முதன் முதலில் புற்றுநோயை கண்டுபிடித்தனர்.
10. கிபி 1600 உம் ஆண்டுகளில் எட்வின் ஸ்மித் பாபிரஸ் என்பவரின் மூலம் தான் முதலில் புற்றுநோய் (மார்பக புற்றுநோய்) கண்டறியப்பட்டது.
11. நுரையீரல் புற்றுநோயை விட தோல் புற்றுநோய் தான் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
12. புற்றுநோய் 200 க்கும் மேற்பட்ட வகைகள் மற்றும் சார்பக வகைகளைக் கொண்டது.
13. ஆப்பிரிக்க பாலூட்டி வகையைச் சேர்ந்த எலி ஒன்று புற்றுநோயை கட்டுப்படுத்தக் கூடிய திரவத்தை உற்பத்தி செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த திரவம் புற்றுநோய் உண்டாக்கும் உயிரணுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
14. 5 முதல் 10 % புற்றுநோய்கள் பரம்பரை காரணமாக வருகிறது என்று கூறப்படுகிறது. மற்றவை எல்லாம் சுற்றுச்சூழல் காரணிகள், புகை பழக்கம், மது பழக்கம், அதிக பருமன் ஆகியவற்றால் வருகிறது.
15. வலது மார்பை விட இடது மார்பகத்தை தான் புற்றுநோய் அதிகம் பாதிக்கிறது. 5 முதல் 10 சதவீதம் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மெலனோமா என்ற ஒரு வகை புற்றுநோய் அதிகம் இடது மார்பகத்தில் தான் ஏற்படுகிறது.
16. இது ஆண்களுக்கு அதிகமாக விதைப்பை, பெருங்குடல் மற்றும் நுரையீரலில் வருகிறது.
17. பெண்களில் மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
18. 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15,590 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
19. தேசிய புற்றுநோய் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 2,79,100 மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
20. புற்றுநோய் உள்ள ஒருவர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் வரை உயிர் வாழ முடியும். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் ஐந்து ஆண்டு வரை வாழ்வதற்கான வாய்ப்பு 99 சதவீதம் உள்ளது.
புற்றுநோய் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Cancer in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com