ஹைட்ரஜன்: 20 Interesting Facts about Hydrogen in Tamil
ஹைட்ரஜன் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஹைட்ரஜன் அல்லது ஐதரசன் என்பது H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமம் ஆகும். தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் லேசான தனிமமாகக் கருதப்படுவது ஹைட்ரஜன் தான். ஹைட்ரஜன் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Hydrogen in Tamil
ஹைட்ரஜன் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. இதன் அணு எண் 1, அணு எடை 1.008 ஆகும். இது நீரியம், நீரகம், ஐதரோசெனியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
2. ஹென்ரி கேவன்டிஷ் என்பவர் 1766 ஆம் ஆண்டு துத்தநாகம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைத்து செய்த சோதனையில் ஹைட்ரஜன் உருவாவதை கண்டுபிடித்தார்.
3. உலகில் அதிக அளவில் உள்ள ஒற்றை அணு தனிமம் ஹைட்ரஜனே ஆகும். அண்டத்தில் மொத்த அணுக்கூறு நிலையில் 75% ஹைட்ரஜன் இடம் பெற்றுள்ளது.
4. ஹைட்ரஜன் என்ற பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. ஹைட்ரோ(hydro) என்றால் நீர் என்று பொருள். ஜென்(genes) என்றால் உருவாக்கம் என்று பொருள். பிரஞ்சு வேதியியல் ஆய்வாளர் ஆன்டனி லேவோஸ்ஸியர் இதற்கு பெயரிடப்பட்டார்.
5. சில விண்மீன்கள் பிளாஸ்மா நிலை ஹைட்ரஜன் நிரம்பிய விண்மீன்களாகக் கருதப்படுகின்றன.
6. ஹைட்ரஜன் என்பது சீர்நிலை வெப்ப அழுத்தம் கொண்ட நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்க கூடிய தனிமம் ஆகும்.
7. இது கார்பனுடன் சேர்ந்து எண்ணில் அடங்கா கரிம வேதிப்பொருட்களை தந்துள்ளது.
8. ஹைட்ரஜன் சேர்மம் இல்லாத உயிரினமே இல்லை எனக் கூறலாம். ஏனெனில் இது ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீர் ஆகிறது.
9. ஹைட்ரஜனின் மூன்று ஐசோடோப்புகள்: ப்ரோட்டியம், டியூடெரியம், டிரிடியம் ஆகும்.
10. ஹைட்ரஜனின் மிக முக்கியமான ஐசோடோப்பு ப்ரோட்டியம் ஆகும். ஏனென்றால் இதில் 1 ப்ரோட்டான் 1 எலக்ரான் மற்றும் 0 நியூட்ரான் உள்ளன. இதுவே ஹைட்ரஜனை நியூட்ரான் இல்லாத ஒரே தனிமமாகக் கருதக் காரணம்.
11. நாசாவின் விண்ணோட முக்கிய இயந்திரங்களுக்கு ஹைட்ரஜன் தான் எரிபொருள் ஆக பயன்படுத்தப்படுகிறது.
12. ஹைட்ரஜன் கலவைகள் பொதுவாக ஹைட்ரைட்ஸ் (hydrides) என்று அழைக்கப்படுகிறது.
13. அமோனியா தயாரிப்பு முறையில் ஹைட்ரஜன் பயன்படுகிறது. புதைபடிவ எரிபொருள்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
14. ஹைட்ரஜன் காணக்கூடிய ஒளி மற்றும் அகச்சிவப்பு ஒளியில் ஒளிபுகக் கூடியது.
15. ஹைட்ரஜன் அனைத்து தாவரங்கள், விலங்கு திசுக்களில் 10 சதவீதம் இடம் பெற்றுள்ளது. முக்கியமாக புரதம், கொழுப்பு மற்றும் நீர்.
16. அனைத்து வாயுக்களை விடவும் குறைந்த அடர்த்தி கொண்ட தனிமம் ஹைட்ரஜனே ஆகும். காற்றை விடவும் 14 மடங்கு மெலிதானது இது.
17. நெருப்பை கடத்துவதில் சிறந்தது ஹைட்ரஜன். மற்ற வாயுக்களை விட இதனுள் இயக்க ஆற்றல் வேகமாக வழங்கப்பட வல்லது.
18. 1671 ஆம் ஆண்டு ராபர்ட் பாய்லே என்பவர் அமிலமும் இரும்பும் வைத்து செய்த எதிர்வினையில் ஹைட்ரஜன் உருவாகிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்.
19. முதல் ஹைட்ரஜன் குண்டு 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது.
20. கொழுப்பு மற்றும் எண்ணெய் ஹைட்ரஜன் ஏற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஹைட்ரஜன் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Hydrogen in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com, https://en.wikipedia.org/wiki/Hydrogen