குரோமியம்: 15 Interesting Facts about Chromium [Cr] in Tamil
குரோமியம் [Chromium] பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
குரோமியம் (நீலிரும்பு) Chromium Cr என்கிற வேதியியல் குறியீடு கொண்டுள்ள ஒரு தனிமம் ஆகும். இது ஒரு மாழையும் (உலோகமும்) ஆகும். குரோமியம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
15 Interesting Facts about Chromium in Tamil
குரோமியம் பற்றி 15 சுவாரஸ்யமான உண்மைகள்
1. குரோமியம் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது 1797 ஆம் ஆண்டு ஆகும். இது பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் லூயிஸ் வாகியூலின் என்ற வேதியியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.
2. குரோமியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. குரோமியத்தின் செழுமை பூமியின் மேலோட்டுப் பகுதியில் (0.02 %) காணப்படுகிறது.
3. இதன் வேதிக் குறியீடு Cr ஆகும். இதன் அணுவெண் 24, அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும்.
4. குரோமியம், குரோமைட்டு என்ற செவ்வீயத் தாது, குரோமிடைட்டு, குரோகோய்சைட்டு போன்ற கனிமங்களில் காணப்படுகின்றது.
5. இந்தியாவில் சேலம் மாவட்டத்திலும் துருக்கி, ஈரான், அல்பேனியா, பின்லாந்து, பிலிப்பைன்சு, மலகாசி, தென் உரொடீசியாவிலும் கிடைக்கின்றது.
6. உலகில் குரோமியம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்ற இடம் தென் ஆப்ரிக்கா ஆகும். தன் உலகளாவிய உற்பத்தியில் 48% உற்பத்தி செய்கிறது.
7. கார்பன் மற்றும் போரானுக்கு அடுத்த நிலையில் பூமியில் மூன்றாவது கடினமான பொருள் குரோமியம் ஆகும்.
8. குரோமியம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது ஆகும். இதன் பொருள் நிறம் (குரோமா) ஆகும். இது குரோமியத்தின் நிறத்தை குறிக்கிறது.
9. குரோமியம் ஒரு சாம்பல் நிற அதிக பளபளப்பும் கடினமும் கொண்டுள்ள மாழை. அதன் உருகுநிலை உயர்வானது.
10. குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான, பொலிவு மிக்க, உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும்.
11. அதனால் இதை முழு அளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை. ஆக்ஸி-ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது.
12. குரோமியம் திடமாகவோ திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இருக்கும் தன்மை கொண்டது. இது ஒரு சுவையற்ற நிறமற்ற உலோகம் ஆகும்.
13. இது துரு பிடிக்காதது. அதனால் இந்த குரோமியம் துருவேறா எஃகு போன்றவற்றில் கலக்கப்படுகிறது. இரும்பு பொருட்களை ஷீல்ட் செய்வதற்கு தேவைப்படுகிறது.
14. குரோமியம் அதன் பளபளப்பான தோற்றத்திற்கு பெயர் கொண்டது ஆகும். எனவே இது பார்க்கக் கூடிய ஒளியை 70% கடத்துகிறது.
15. இவை நிறமிகளை தயார் செய்வதற்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறமிகளாக கண்ணாடி மாணிக்கங்கள் மரகதங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
குரோமியம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Chromium [Cr] in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com