அலுமினியம்: 20 Interesting Facts about Aluminum in Tamil
அலுமினியம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள்.களிமண்,செங்கல் போன்றவைகள் சேர்த்து அலுமினியம் சிலிக்கேட்டு என 270 அலுமினியச் சேர்வைகள் உள்ளன. அலுமினியம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Aluminum in Tamil
அலுமினியம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. அலுமினியம் ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 13 ஆகும். இது பூமியில் அதிகம் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று. இது மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்த வல்லது.
2. உலகிலேயே ஆஸ்திரேலியா தான் அலுமினிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
3. கோள்களின் மேலோடுகளில் 8% அலுமினியத்தால் ஆனது. நிலவில் அதிகளவில் அலுமினியம் காணப்படுகிறது.
4. ஒரு காலத்தில் அலுமினியம் மிகுந்த மதிப்பு மிக்கதாக கருதப்பட்டது. மூன்றாம் நெப்போலியன் தன் விருந்தினர்களுக்கு அலுமினியத் தட்டில் தான் உணவளித்தார்.
5. பண்டைய காலத்தில் தங்கத்தை விடவும் உயர்ந்ததாக இருந்தது அலுமினியம்.
6. அலுமினியத்தின் அடர்த்தி 2.7 கிராம் ஆகும். சிலிக்கானுக்கு அடுத்து உலகில் அதிக அளவில் பயன்படக்கூடிய உலோகம் அலுமினியம் ஆகும்.
7. அலுமினியம் பலமுறை மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவான உலோகம் ஆகும். அலுமினியம் துரு பிடிக்காது.
8. பாக்ஸைட் என்ற தாதுவில் இருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இதன் வேதிக்குறியீடு Al ஆகும்.
9. அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும், டைட்டானியமும், சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன.
10. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம்.
11. பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர், ஃபெல்ட்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும்.
12. நவரத்தினங்களில் மரகதம், கோமேதகம், நீலக்கல், பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது. தங்கம், வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை.
13. அலுமினியத்தை பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தினார்கள். இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என்று அழைத்தனர்.
14. 1787 ல் லவாய்சியர் இதை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார். 1827 ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.
15. அலுமினியம் ஜொலிக்காது காந்த விசை கிடையாது.
16. அலுமினியக் கலவைகள் பெரும்பாலாக துத்தநாகம், செம்பு, சிலிக்கான், மாங்கனீஸ் போன்றவைகளால் ஆனது.
17. அலுமினியம் பூமியில் இருந்து எடுக்கும் போது சுத்த அலுமினியமாக இருக்காது. அதன் தாதுக்களில் இருந்து தான் பிரித்தெடுக்க முடியும்.
18. அலுமினியம் 98% அகச்சிவப்பு கதிர்களை பிரதிபலிக்க வல்லது.
19. காணக்கூடிய ஒளியை 92% பிரதிபலிக்கிறது அலுமினியம்.
20. நாம் பயன்படுத்திய அலுமினிய டின்கள்(குளிர்பானங்கள்) 60 நாட்களில் மறுசுழற்சிக்கு செல்கின்றன.
அலுமினியம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Aluminum in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com