டைட்டேனியம்: 20 Interesting Facts about Titanium
டைட்டேனியம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
டைட்டேனியம் அல்லது தைட்டானியம் என்னும் வேதிப்பொருள் தனிம அட்டவணையில் அணுவெண் 22 கொண்ட Ti என்னும் குறியீடு கொண்ட தனிமம். இது வெள்ளி போன்ற வெண்மையான பளப்பளப்பானது. டைட்டேனியம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Titanium in Tamil
டைட்டேனியம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. அலுமினியத்தை விடவும் மிக உறுதியானது, வலிமையானது இந்த டைட்டேனியம் ஆகும்.
2. இது துரு பிடிக்காது. இது இயற்கையில் அப்படியே முழுமையாக கிடைப்பதில்லை. ரக்டைல், இல்மினைட் மற்றும் ஸ்பீன் போன்ற தனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.
3. பூமியில் அதிக அளவில் கிடைக்கும் தனிமங்களின் வரிசையில் இது 9 வது இடத்தைப் பெறுகிறது.
4. செம்பு, துத்தநாகம், ஈயம், தங்கம் [Gold], வெள்ளி, பிளாட்டினம், மாலிப்பிடினம், டங்க்ஸ்டன், நிக்கல், டின் இவற்றை விட பூமியின் புறவோட்டில் டைட்டானியம் அதிகமாகக் கிடைக்கிறது.
5. டைட்டானியம் அதிக அளவில் ஆஸ்திரேலியாவிலும் அடுத்தபடியாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.
6. உயர் வெப்பநிலையிலும் டைட்டானியம் ஆக்சைடு நிலைப்புத் தன்மை மிக்கதாக இருக்கும். இதன் உருகு நிலை 1800 C ஆகும்.
7. டைட்டானியத்தின் உண்மையான பெயர் மானக்கன் (Manaccan) ஆகும். 1791 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் கிரீகர் என்பவர் தான் டைட்டானியத்தை முதலில் கண்டுபிடித்தார்.
8. நான்கு வருடங்களுக்கு பிறகு ஜெர்மன் விஞ்ஞானி மார்டின் கென்ரிச் கிளாப்ளஸ் என்பவர் அதை மறுமுறை கண்டுபிடித்து டைட்டானியம் என்று பெயரிட்டார்.
9. டைட்டானியம் என்ற பெயர் டைட்டான் என்ற கிரேக்க கடவுளின் பெயரால் வந்தது.
10. டைட்டானியம் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மனித உடல், செடி, கடல் நீர், நிலவு, சூரியன் மற்றும் மற்ற கோள்களிலும் இருக்கின்றன. ஆனால் அவை சுத்த டைட்டானியமாக இருப்பதில்லை மற்ற கனிமங்களுடன் சேர்ந்து கலவையாக இருக்கிறது.
11. டைட்டானியம் டையாக்ஸைடு பெயின்ட், அழகு சாதன பொருட்கள், பேப்பர், டூத் பேஸ்ட், சன்ஸ்கீரின் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
12. நம் பூமியில் 0.63% தான் டைட்டானியம் உள்ளது.
13. டைட்டானியம் தடி மருத்துவ பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற உலோகங்களைப் போல் டைட்டானியம் மனித உடலால் நிராகரிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சை செய்யும் பொருட்களில் டைட்டானியம் சேர்க்கப்படுகின்றன.
14. டைட்டானியம் இடுப்பு, தோள்பட்டை மற்றும் மூட்டு மாற்று சிகிச்சைகளுக்கும் பல் மருத்துவ சிகிச்சைக்கும் தேவைப்படுகிறது.
15. டைட்டேனியம் விமானப் பாகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
16. எடை இல்லாமல் இருப்பதால் டைட்டானியம் விளையாட்டுப் பொருட்களில் பயன்படுத்தபடுகிறது. மிதிவண்டி பாகங்கள், கோல்ஃப் மற்றும் டென்னிஸ் பாகங்களிலும் பயன்படுகிறது.
17. டைட்டேனியம் பளபளப்பான உலோகம் ஆகும். அதனால் இது தங்கங்களில் சேர்க்கப்படுகின்றன. இது மோதிரம், நகைகள், சன் கிளாஸ்(கண்ணாடி), கடிகாரம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது.
18. இது மின்சாரத்தை கடத்தாது. காந்த ஈர்ப்பு விசை கிடையாது.
19. நைட்ரஜன் [Nitrogen] வாயுவுடன் சேரும் போது எரியும் ஒரே தனிமம் டைட்டானியம் தான்.
20. நியூக்ளியர் கழிவுகளை சேமித்து வைக்க பாதுகாப்பான பொருள் டைட்டானியம் மட்டுமே ஆகும்.
டைட்டேனியம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Titanium in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Titanium