டைட்டானிக்: 20 Interesting Facts about Titanic in Tamil
டைட்டானிக் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவைகளுள் டைட்டானிக் கப்பல் தனித்துவம் வாய்ந்தது. ஆயிரக் கணக்கான மக்களை சுமந்து கொண்டு தன் முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளாகி அழிந்து போனது என்றாலும் வரலாற்றில் மிகப்பெரிய இடம் பிடித்தது. டைடானிக் கப்பல் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Titanic Ship in Tamil
டைட்டானிக் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் 1912 இல் 2223 பயணிகளை ஏற்றிக்கொண்டு தன் முதல் பயணத்தை தொடங்கியது. ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 11:40 மணிக்கு பனிப்பாறையில் மோதி இரண்டாக பிழந்து வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மூழ்கியது.
2. கிட்டத்தட்ட 73 வருடங்கள் கழித்து 1985இல் தான் இது கடலுக்கு அடியில் இருந்தது கண்டறியப்பட்டது. சுமார் 12,500 அடி ஆழத்தில் நீர்மூழ்கிகள் வைத்து தேடிய பின் தான் கிடைத்தது.
3. இந்த டைட்டானிக் கப்பல் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும்.
4. ஒரே நேரத்தில் 3500 பேர் வரை பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. 2223 பேர் பயணம் செய்த கப்பலில் 1503 பேர் பலியானார்கள்.
5. உலகிலேயே அதிக பனிப்பாறைகள் உள்ள இடம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் தான். கப்பல் மோதிய பனிப்பாறை நீரின் மேலே 100 அடி உயரத்திலும் கடலுக்கு அடியில் 200 முதல் 300 அடி ஆழத்திலும் இருந்தது.
6. இங்கிலாந்தின் மிகப்பெரிய நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது. கப்பல் கட்டும் பணி 1909 ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கி 1911 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி தான் முடிந்தது.
7. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கட்டப்பட்ட இக்கப்பலின் எடை 46,328 டன் எடையுள்ளது. டைடானிக் கப்பல் பெண் பாலில் தான் அழைக்கப்படுகிறது.
8. கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைடானிக் கப்பல் ஆனது நீராவியால் இயங்கக் கூடிய மொத்தம் 159 ஓலைகளும் 29 மிகப்பெரிய கொதிகலன்களும் கொண்டிருக்கும்
9. இந்த 45 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல் இயங்குவதற்காக மட்டுமே ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரியானது தேவைப்படுகிறது.
10. இந்த 600 டன் நிலக்கரியை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பல் மட்டுமே 100 டன் எடை கொண்டதாகும். அதனை தினமும் கடலில் கொட்டி வெளியேற்றுவதற்காக 75 பணியாளர்கள் இருந்துள்ளார்கள்.
11. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்த இக்கப்பலில் 68 உயிர் காக்கும் படகுகள் (லைஃப் போட்டுகள்) வரை கொண்டு செல்லலாம் . ஆனால் 20 படகுகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டது. அதன் மூலம் 706 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
12. கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிர் இழக்கக் காரணம்.
13. முதன் முதலில் தொலைபேசி கொண்ட கப்பல் டைட்டானிக் கப்பல் தான். மின் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.
14. புகைப்போக்கி குழாயின் உயரத்தையும் சேர்த்து அளவிடும் போது டைடானிக் கப்பலின் உயரம் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையானது ஆகும்.
15. மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தைக் கொண்டது இந்த டைடானிக் கப்பல்.
16. மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது இந்த டைடானிக் கப்பல். அதிகபட்ச வேகத்தில் சென்றதாலே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் நிறுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
17. டைட்டானிக் கப்பலில் 4 லிஃப்டுகள், தண்ணீரை சூடாக மாற்றும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், இரண்டு நூலகங்கள் மற்றும் இரண்டு முடி திருத்தும் நிலையங்கள் இருந்தன.
18. நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. நான்கு புகை வெளியேற்றப்படும் குழாய்கள் இக்கப்பலில் உள்ளது. ஆனால் மூன்று மட்டுமே புகைபோக்கி குழாய் மீதமுள்ள ஒன்று அழகுக்காக வைக்கப்பட்டது ஆகும்.
19. டைட்டானிக் கப்பல் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை தற்போதைய மதிப்புக்கு 99,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் 50 லட்சத்திற்கும் அதிகம்.
20. நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40டன் உருளைக்கிழங்கு, 7000 முட்டைகோஸ்கள், 3500 பவுண்ட் வெங்காயம், 36000 ஆப்பிள்கள், 1000 பிரெட் பாக்கெட்டுகள் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு தேவைப்பட்டது.
டைட்டானிக் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Titanic in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Titanic