கிரிக்கெட்: 20 Interesting Facts about Cricket in Tamil
கிரிக்கெட் (துடுப்பாட்டம்) பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
கிரிக்கெட் (துடுப்பாட்டம்) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. கிரிக்கெட் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்:
20 Interesting Facts about Cricket in Tamil
கிரிக்கெட் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. கிரிக்கெட் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே கிரிக்கெட்டின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது.
2. பிரிட்டன் பேரரசின் விரிவாக்கம் மூலம் கிரிக்கெட் விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிக்கெட் பன்னாட்டு அடிப்படையில் விளையாடப்படத் தொடங்கியது.
3. தற்போது கிரிக்கெட்டின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டு கிரிக்கெட் அவையில் [ICC] 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் தகுதியைப் பெற்றுள்ளன.
4. உலகில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1787 ஆம் ஆண்டு மார்ச் 15 நாளன்று இலண்டன் இலாட்சு மைதானத்தில் [Lord’s Cricket Ground] இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
5. கிரிக்கெட் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு கனவான்களின் ஆட்டம் (Gentlemen’s Game) என்று அழைக்கப்படுகிறது.
6. முதன் முதலில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது 1975 ஆம் ஆண்டு ஆகும். இது இங்கிலாந்தால் நடத்தப்பட்டது.
7. ஷாகிட் அஃபிரிதி சச்சினின் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு மிக வேகமான ODI சதத்தை அடித்துள்ளார்.
8. கிரிஸ் கேய்லே என்ற மட்டை ஆடுபவர் மட்டும் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த பெருமைக்குரியவர் ஆவார்.
9. சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இதுவரை மூன்று முறை தன் முதல் பந்திலே அவுட் ஆகியுள்ளார்.
10. எம் எள் ஜெய்சிம்மா மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தான் ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஐந்து நாளுமே விளையாடக் கூடியவர்கள் ஆவார்கள்.
11. உலகக் கோப்பையை முதன் முதலில் இந்தியா வென்றது 1983 ஆம் ஆண்டில் தான். இரண்டாவது முறை 28 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டில் தான் வென்றது.
12. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியா வென்றது 1986 ஆம் ஆண்டில் ஆகும். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டில் ஆகும்.
13. 60 ஓவர் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பையை முதன் முதலில் வென்ற ஒரே நாடு என்ற பெருமைக்கு உரியது இந்தியா தான்.
14. அலெக் ஸ்டீவார்ட் என்பவர் இதுவரை 8463 டெஸ்ட் ரன்கள் எடுத்துள்ளார்.
15. 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி 14 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
16. எம் எஸ் தோனி ODI சதம் ஆசியா கண்டத்தை தாண்டி எடுத்ததில்லை. அவர் பாகிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மட்டுமே ODI சதம் எடுத்துள்ளார்.
17. முதன் முதலில் இங்கிலாந்து நாட்டிற்கு உலகக் கோப்பை வென்று கொடுத்தது பெண்கள் அணியே ஆகும்.
18. கிரிக்கெட்டில் கோட் (GOAT- Greatest of all time) என அழைக்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவர் 329 இன்னிங்ஸ்ஸில் 159,71 ரன்கள் எடுத்துள்ளார்.
19. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணியில் சேர்ந்து விளையாடினார்.
20. மிகக் குறைவான நேரத்தில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டி என்பது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஆகும்.
கிரிக்கெட் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Cricket in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com