மக்னீசியம்: 20 Interesting Facts about Magnesium in Tamil
மக்னீசியம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
நமது உடலிற்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான 7 கனிமங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெக்னீசியம் ஆகும்.இந்த மெக்னீசியம் ஆனது கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களுடன் இணைந்து நமது உடலில் 300க்கும் அதிகமான நன்மைகளை பயக்கின்றன. மக்னீசியம் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Magnesium in Tamil
மக்னீசியம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. உலகில் அதிக அளவில் உள்ள தாதுக்களில் மக்னீசியம் 8 ஆவது இடத்தில் உள்ளது.
2. இது Mg என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 12. அணு எடை 24.31.
3. புவியின் மேலோட்டில் இது 2% உள்ளது. காரத்தன்மையுள்ளது.
4. உங்களுக்கு பசியின்மை மற்றும் அடிக்கடி தலைவலி, குமட்டல், தசை வலி, தசைப்பிடிப்பு போன்ற நிகழ்வுகள் நேர்ந்தது என்றால் உடம்பில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
5. மக்னீசியம் உலர் அத்திப் பழம், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
6. 1808 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார். இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார்.
7. நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னாற்பகுப்பு மூலம் மக்னீசியத்தை உற்பத்தி செய்ய முடியும்.
8. மக்னீசியம் பெர் ஆக்சைடு துணிகளை வெளுப்பூட்டப் பயன்படுகிறது. இது தொற்றுத் தடை மற்றும் நஞ்சுத் தடையாகப் பயன்தருகிறது.
9. மக்னீசியம் கார்பனேட், பற்பசை, முகப் பவுடர், வெள்ளி மெருகேற்றி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
10. உயிர் வேதியியலில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று தீர்மானிப்பதில் மக்னீசியத்திற்குப் பங்கிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
11. கோழித் தீவனத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் கோழிகள் இடும் முட்டைகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் உடைவதினால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
12. எளிதில் கோபப்படுபவர்களுக்கும், உணர்ச்சி வயப்படுகின்றவர்களுக்கும் இதயத் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதற்குக் காரணம் கிளர்வுற்ற நிலையில் உடலில் உள்ள மக்னீசியம் எரிந்து போவதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.
13. தாவரங்களில் ஒளிச் சேர்க்கையைத் தூண்டும் குளோரோபில் என்ற பச்சையத்தில் இந்த மக்னீசியம் பங்கு பெற்றுள்ளது.
14. எலும்புகளின் கட்டமைப்பில் மக்னீசியம் பங்கேற்றுள்ளது. நரம்புகளின் வழி சமிக்கைகளைக் கொண்டு செல்ல இது துணை புரிகிறது.
15. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும் நெசவுத் தொழில், அச்சுத் தொழிலில் பயன்படவும் செய்கிறது.
16. இது இலேசான, பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது.
17. இரும்பின் அடர்த்தியில் 9-ல் 2 பங்கும், அலுமினியத்தின் அடர்த்தியில் 3-ல் 2 பங்கும் உள்ளது.
18. இது கடல் நீரில் அதிகம் உள்ளது.கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது.
19. இதைக் காற்றில் எரிக்கும் போது கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது. நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று.
20. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும், வெப்பத்தையும் தருகிறது. இந்த வெப்பம் மிகவும் அதிகமானது. 4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது.
மக்னீசியம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Magnesium in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Magnesium