பெரிலியம்: 20 Interesting Facts about Beryllium in Tamil
பெரிலியம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
பெரிலியம் என்பது எடையில் மிகவும் குறைவான தனிமம் ஆகும். இது வெப்பத்தை நன்றாகக் கடத்தக்கூடியது ஆகும். பெரிலியம் (Beryllium) பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Beryllium in Tamil
பெரிலியம் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. இதன் அணு எண் 4. இதன் வேதியியல் குறியீடு Be ஆகும். காந்தத் தன்மை அற்றது.
2. செப்பு போன்ற உலோகங்களுக்கு உறுதியூட்ட சிறிதளவு பெரிலியம் பயன்படுத்தப்படுகிறது.
3. X கதிர்களை கடத்த வல்லது இந்த பெரிலியம்.
4. 1798 ல் பெரைல் என்று அழைக்கப்பட்ட பெரிலியம் அலுமினியம் சிலிகேட் என்ற கனிமத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்று அதன் ஆக்சைடை மட்டும் பிரித்தெடுத்தவர் பிரஞ்சு நாட்டு வேதியியல் அறிஞரான நிக்கோலஸ் லூயிஸ் வாக்குலின்.
5. இதை குளுசினியம் (Glucinium) என அழைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். இச்சொல் இனிப்பு என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான கிளைகைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.
6. இன்றைக்கு இப்பெயர் பிரான்சு நாட்டில் மட்டும் புழக்கத்தில் உள்ளது. பிற நாடுகளில் கலாப்ரோத் என்ற வேதியியலார் சூட்டிய பெரிலியம் என்ற பெயரே நிலைபெற்றது.
7. இது பெரைல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்றாலும் இதன் மூலச்சொல் மரகதம் என்று பொருள்படும் பெரைலோஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லாகும்.
8. பெரைலில் 11 லிருந்து 13 சதவீதம் பெர்லியம் ஆக்சைடு உள்ளது. இந்த உலோகம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் 2 முதல் 6 சதவீதம் செழிப்புடன் காணப்படுகின்றது.
9. பெரிலியத்திற்கு 100 க்கும் மேற்பட்ட கனிமங்கள் அறியப்பட்டிருந்தாலும் இவற்றுள் பெரைல், பினாசைட், கிரைசோ பெரைல் மற்றும் பெர்ட்ரான்டைட் போன்றவை முக்கியமானவை ஆகும்.
10. இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, கனடா, அமெரிக்கா, காங்கோ, தென்ஆப்ரிக்கா, உகண்டா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெரைல் கனிமம் மிகுதியாகக் கிடைக்கின்றது.
11. 1928 ல் வோலர் (Wohler) மற்றும் புஸ்சி(Bussy) ஆகியோர் பெர்லியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கும் வழிமுறையைக் கண்டறிந்தனர். எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு லிபியூ (Lebeau) என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானியே தூய பெர்லியத்தை உப்பூட்டிய மின்னாற் பகு நீர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் வழி முறையைக் கண்டறிந்தார்.
12. இன்றைக்கு வர்த்தக அடிப்படையில் பெர்லியம் புளுரைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு மக்னீசியத்தால் உட்படுத்தி பெர்லியத்தைப் பெறுகின்றார்கள்.
13. பெரிலியம் பெரும்பாலும் இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுகிறது. பெரிலியம் உயரளவு உருகுநிலையும் எக்கை விட உறுதியாகவும் இருப்பதால் வானவூர்தி, விண்ணூர்தி, ஏவூர்தி போன்றவைகளின் கட்டமைப்பிற்கு பயன்படுகிறது.
14. ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக ஆக்சிஜனில் எரிந்து மிகஅதிக வெப்பம் வெளியிடும் தனிமம் பெரிலியமாகும். ஒரு கிராம் பெரிலியம் 17.2 கிலோ கலோரி வெப்பத்தை வெளியிடுகின்றது.
15. இது அலுமினியத்தைக் காட்டிலும் அதிகமாகும். இதனால் ஏவூர்திக்கான திண்ம எரிபொருளாக பெரிலிய உலோகப் பொடியைப் பயன்படுத்த முடிகிறது.
16. பெரிலியம் ஆற்றல் மிக்க எரிபொருளாயினும் இதன் எரி விளைமங்கள் நச்சுத்தன்மை உடையன. பெரிலியோசிஸ் என்ற பாதிப்பைத் தூண்டுகின்றன.
17. பெர்லியத்தின் நியூட்ரான் உட்கவர் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால், நியூட்ரான்களை அணு உலைக்குள்ளேயே வைத்திருக்கச் சரியான நியூட்ரான் எதிரொளிப்பானாக பெர்லியம் பயன்படுகிறது.
18. விண்கலம் தொடர்பான கட்டமைப்புகளில் பெரிலியத்தைப் பயன்படுத்துவதினால் 30-60 சதவீதம் மூலப் பொருள் மிச்சமாகிறது.
19. அணு உலையைச் சுற்றி பெரிலியத்தாலான மெல்லிய சுவர் நியூட்ரான் கசிவைத் தடுக்கிறது. பெரிலியத்தின் பரப்பைத் தேய்த்து வளவளப்பூட்ட முடியும். இதனால்தான் அதை ஓர் உலோக எதிரொளிப்பானாகப் பயன்படுத்த முடிகிறது.
20. பெரிலியத்தை சுருள் வில் உலோகம் என்பர். கைக் கடிகாரங்களிலும், கனரக வண்டிகளிலும், இரயில் வண்டிகளிலும் தேவைப்படுகின்ற வலுவான முறிவிலாத சுருள் வில்களுக்கு இது பயனளிக்கிறது.
பெரிலியம் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Beryllium in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Beryllium