டைனோசர்: 20 Interesting Facts about Dinosaurs in Tamil
டைனோசர் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
இந்த உலகில் பல உயிரினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. ஆனால் அதில் டைனோசர் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. இந்த அரிய வகை உயிரினங்களை நாம் யாருமே கண்களால் பார்த்ததில்லை. திரைப்படங்களில் மட்டுமே காண்கிறோம். டைனோசர் பற்றி வியப்பூட்டும் வினோதங்களை இங்கு காண்போம்.
20 Interesting Facts about Dinosaurs in Tamil
டைனோசரைப் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. மனிதன் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தனது காலடிதடத்தை பதித்த உயிரினங்கள் தான் டைனோசர்கள். மனிதனை விடவும் 64 மடங்கு அதிகம் இந்த உலகை ஆண்டுள்ளது இந்த டைனோசர்கள்.இவை அளவில் மனிதனை விட மிகவும் பெரியதாக உள்ளன. இவை பறவை இனத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகின்றன.
2. டைனோசர்கள் எப்படி இருக்கும் என்பதை நமக்கு முதன் முதலில் திரை மூலமாக காட்டிய திரைப்படம் ஜுராசிக் பார்க் என்னும் ஆங்கில திரைப்படம் ஆகும்.
3. 1842 ஆம் ஆண்டு சர் ரிச்சர்ட் ஓவன் என்பவர் டைனோசர்கள் என்ற பெயரின் விளக்கத்தை வெளியிட்டார். டைனோசர் என்பது கிரேக்க மொழியில் இருந்து வந்தது. “டைனோ” (deino) என்றால் பயத்துடன் பெரியது என்றும், “ஸாரஸ்”(sauros) என்றால் பல்லி என்றும் பொருள்.
4. ஆரம்ப கால கிரேட்டேசியஸ் காலத்தைச் (145-வருடங்களுக்கு முன்பு) சேர்ந்த டைனோசராக அமர்காசரஸ் உள்ளது. இதன் தலை முதல் வால் வரை மொத்தமாக 30 அடி நீளமும் 3 டன் எடையைக் கொண்டது.
5. 23 கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து அழிந்த உயிரினம் இந்த டைனோசர்கள். இவை மாமிசம் உண்ணும் டைனோசர் மற்றும் தாவரம் உண்ணும் டைனோசர் என இரண்டு வகைகளாக உள்ளன.
6. அமெரிக்காவின் மெக்சிகோவில் மெகாலோசரஸ் (Megalosaurus) என்ற இடத்தில் டைனோசரின் படிமம் கிடைத்த போது தான் டைனோசர் என்ற உயிரினம் வாழ்ந்ததை முதன் முதலில் கண்டறிந்தனர்.
7. டைனோசர்கள் பல வடிவங்களில் உள்ளன. அதாவது நம் கையில் அடங்குவது முதல் மலை அளவிற்கு பெரியதாகவும் உள்ளது.
8. இவைகள் அதிக அளவு அறிவு கொண்டது. தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் அளவிற்கு திறன் கொண்டது. தங்களின் ஓசையை வைத்தே பேசிக்கொள்ளுமாம்.
9. டைனோசர்கள் தங்களை தாங்களே பரிணாமம் அடைந்து தங்களை ஒரு பறவையாகவும் மாற்றிக் கொண்டன. ஒரு காலக்கட்டத்தில் சிறிய பறவையாக மாறிவிட்டது. அது தற்போது நம் கூட வாழும் பறவையாக கூட இருக்கலாம்.
10. டைனோசர்களில் மாமிசம் உண்ணும் டைனோசர்கள் மிகப்பெரிய அளவில் உள்ளன. ட்ரையானோசரஸ்(Tryannosaurus) தன் உருவத்தில் பெரியதாக உள்ளது. இதற்கு இரண்டு கால்கள் மட்டுமே இருக்கும். மற்ற இரண்டு கைகளாக செயல்படும். இது வேட்டையாடி உண்ணும் மாமிச உண்ணி.
11. அர்ஜென்டினோசரஸ் (Argentinosaurus) என்பவை தாவர உண்ணி டைனோசர் ஆகும். இவை ஒரு நாளைக்கு 1 டன் தாவரங்களை உண்ணும். நீண்ட கழுத்தடன் உள்ளவை. இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் ஆகும். இதன் தலை முதல் வால் வரை 100 அடி வரை இருந்திருக்கலாம்.
12. டைனோசர்கள் உணவை வயிற்றில் அரைக்கப் பெரிய பாறைகளை அடிக்கடி விழுங்கியிருக்கின்றன.
13. நாம் நினைப்பது போல் டைனோசர்கள் சிங்கம் போல கத்தாது. அவை பூனை போல் மெதுவாக கத்துமாம்.
14. நாம் படத்தில் பார்ப்பது போல வேகமாக ஓடாது. அது மிகவும் மெதுவாகவே செல்லும். முட்டையிட்டு வாழக்கூடியவை.
15. இவைகள் பல நிறங்களை பார்க்கும் தன்மை கொண்டவை. அதாவது மனிதனின் கண்களுக்கு தெரிவதைவிடப் பல நிறங்கள் டைனோசர்களுக்கு தெரிகின்றன.
16. 17 கோடி வருடங்கள் பூமியில் வாழ்ந்தவை இந்த டைனோசர்கள். இவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது உடலின் வெப்பத்தையும் குளிரையும் மாற்றக்கூடிய திறன் படைத்தது.
17. இந்த டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பூமியில் ஒரு பெரிய கல் (Asteroid) விழுந்ததால் இந்த டைனோசர்கள் உயிரினம் முழுவதும் அழிந்து போயின. 14 கிலோமீட்டர் விட்டம் கொண்ட மிகப்பெரிய கல் பூமியில் விழுந்ததால் பல உயிரினங்கள் இதில் அழிந்து போயின.ஒரு வருடத்திற்கு சூரிய ஒளி பூமியில் படவே இல்லை.
18. டைனோசர்கள் அதீத வளர்ச்சி உடையவை. வேகமாக மிகப்பெரியதாக வளர்ந்து விடுமாம். இதன் பற்கள் குறைந்தது 10 அங்குல நீளமாக இருக்குமாம்.
19. டைனோசர்கள் உருவத்திற்கும் மூளைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்குமாம். மிகவும் புத்திசாலித்தனமான டைனோசர்களில் ஒன்று ட்ரூடன் என்கிற வேட்டையாடும் பறவை போன்ற டைனோசர் ஆகும். ட்ரூடனுக்கு மனிதர்களைப் போல ஸ்டீரியோஸ்கோபிக் பார்வை இருந்தது.
20. பேபி முஸ்ஸாரஸ் என்பவை தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களில் மிகச் சிறியதாகும்.
டைனோசர் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Dinosaurs in Tamil. We hope today you know something useful!
Images Credit: pixabay.com