நைட்ரஜன்: 20 Interesting Facts about Nitrogen in Tamil
நைட்ரஜன் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்
மனித உடலில் ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றிற்கு அடுத்ததாக உள்ளது நைட்ரஜன் (Nitrogen) ஆகும். பிரபஞ்சத்தில் இது ஒரு பொதுவான தனிமம் ஆகும். நைட்ரஜன் பற்றி நாம் அறியாத ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கே காணலாம்.
20 Interesting Facts about Nitrogen in Tamil
நைட்ரஜன் பற்றி 20 சுவாரஸ்யமான உண்மைகள்
1. நைட்ரஜனின் அணு எண் 7 அணு எடை 14.0067 ஆகும். N என்பது இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு.
2. இது ஒரு நிறமற்ற சுவையற்ற மணமற்ற தீப்பிடிக்காத ஒரு வாயு ஆகும். அறை வெப்பநிலையில் இது வாயு வடிவில் உள்ளது.
3. பிரெஞ்சு ஆய்வாளர் ஆன்டனி லாரன்ட் லாவோஸ்ஸியர் நைட்ரஜனுக்கு அஸோட் (azote) என்று முதலில் பெயரிட்டார். அஸோட் என்றால் (without life) வாழ்க்கை இன்றி என்று பொருள்.
4. பின்னர் நைட்ரஜன் என்று அழைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் இருந்து வந்தது இப்பெயர். நைட்ரோன் (nitron) என்றால் சோடா என்றும் ஜென்(genes) என்றால் உருவாக்கம் என்றும் பொருள்.
5. வளிமண்டலத்தில் 78.1% அளவிற்கு நைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது.
6. சூரிய மண்டலம் மற்றும் பால் வெளியில் உள்ள மொத்த பொருட்களில் நைட்ரஜன் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.
7. தொழில் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சேர்மங்களான அமோனியா, நைட்ரிக் அமிலம், சயனைடு, அமினோ அமிலம், நியூக்ளிக் அமிலம், அடினோசின் முப்பாசுப்பேட்டு போன்றவை நைட்ரஜனைக் கொண்டுள்ளன.
8. உயர் வலிமை துணி மற்றும் உயர் பசையில் பயன்படும் சயனோஅக்ரிலேட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் கெவ்லார் இழையாகவும் நைட்ரசன் பயன்படுகிறது.
9. ஸ்காட்டிஷ் ஆய்வாளர் டோனியல் ரூதர்போர்டு என்பவர் 1772 ஆம் ஆண்டு முதன் முதலாக நைட்ரஜனைக் கண்டு பிடித்தார்.
10. குளிரூட்டி (air conditioning), உணவுகள், மது உற்பத்தி, உரங்கள் என்று பல்வேறு வகையில் இது பயன்படுகிறது.
11. மரங்கள் வேர் மூலமாக மண்ணில் இருந்து நைட்ரஜனை எடுத்துக் கொள்கிறது. அதை தன் இலைகளில் க்ளோரோபில் தயாரிக்க உதவுகிறது.
12. தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுவான மந்த வாயு நைட்ரஜன் ஆகும். ஏனெனில் இது குறைந்த விலை, எதிர்வினை கொண்டதால்.
13. குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் வெல்டிங் செய்வதற்கு பாதுகாப்பு கவசமாக நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
14. ஆரோராவின் ஆரஞ்சு-சிவப்பு, ஊதா-பச்சை, ஊதா-நீலம், போன்ற நிறங்களுக்கு நைட்ரஜன் தான் காரணம்.
15. நைட்ரஜன் வாயுவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்து எடுக்க திரவமாக்கல் மற்றும் பகுதியாக வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
16. திரவ நைட்ரஜன் 77 k (-196°C,-321°F) வெப்பநிலையில் கொதிக்கிறது. 63 K (-210.01°C) நிலையில் குளிர்வடைகிறது.
17. சனி கோளின் பெரிய நிலவான டைடானின் வளிமண்டலம் 98% நைட்ரஜனால் ஆனது.
18. நைட்ரஜன் சுழற்சி இயற்கையில் முக்கிய அம்சமாக உள்ளது. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை பாக்டீரியாக்கள் அமோனியாவாக மாற்றுகிறது. அதை மரங்கள் எடுத்துக் கொள்கின்றன.
19. சில பாக்டீரியாக்கள் அதை அமினோ அமிலம் மற்றும் புரதமாக மாற்றுகிறது. அதை விலங்குகள் மற்றும் மனிதர்கள் உட்கொள்கிறோம்.
20. பின்னர் கழிவுகள் மூலம் அவை மண்ணிற்கு நைட்ரஜனாக செல்கின்றன.
நைட்ரஜன் பற்றிய இந்த சுவாரஸ்யமான உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. இன்று நீங்கள் பயனுள்ள ஒன்றை அறிந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்!
Thank you for reading these Interesting Facts about Nitrogen in Tamil. We hope today you know something useful!
Images Credit: https://en.wikipedia.org/wiki/Nitrogen